விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய சஜித்தையும் விசாரணை செய்ய வேண்டும்: கருணா

Published By: J.G.Stephan

22 Jun, 2020 | 06:23 PM
image

இந்தியபடையை அழிக்க  சஜித்பிரேமதாசவும் அவரின் தந்தையார் பிரேமதாஸ ஆகிய இவரும் ஆயுதங்கள் துப்பாக்கி ரவைகளை விடுதலைப்புலிகளுக்கு வழங்கியிருந்தார்கள். எனவே  சஜித்பிரேமதாசவையும் சி.ஜ.டி. யினர் விசாரணைக்கு அழைக்கவேண்டும் என தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவரும் அகில இலங்கை தமிழர் மகாசபையின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாவிதன்வெளி பிரதேசத்தில் பிரச்சாரத்தின்போது ஆனையிறவில் ஒரே இரவில் 3 ஆயிரம் இராணுவத்தை கொன்றதாக தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உடனடி விசாரனைக்கு அழைக்கப்பட்டுள்ளது தொடர்பாக அவரிடம் இன்று திங்கட்கிழமை (22) தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

நான் பதிலை கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றேன் ஒழிவு மறைவுக்கு ஒன்றுமில்லை கடந்தகாலத்தில் நடந்த கொடிய யுத்தத்தை பற்றிதான் நான் பேசினேன். அதை நிறுத்தி சமாதானத்தை கொண்டு வந்து ஒரு மாற்றத்தை உருவாக்கியதை தான் பிரச்சாரத்தின்போது அறிவித்தேன் இதை அரசியல் இலாபமடைகின்றனர். சிலர்  பூதாகரமாக்கி குறிப்பாக சஜித்பிரேமதாச கடும் முயற்சிகளை எடுத்து பூதாகரமாக்கியுள்ளார். 

உண்மையில் அவரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்னை பொறுத்தளவில் இந்தியபடை வெளியேறிய காலத்தில்  இந்தியபடையை அழிக்க  இவரின் தந்தையாரும் இவரும் துப்பாக்கி ரவைகள் ஆயுதங்களை விடுதலைப்புலிகளுக்கு வழங்கியிருந்தார்கள்.

அனுராகுமார திஸநாயக்க இதைப்பற்றி பேச அருகதையற்றவர். அவர்கள் தங்கள் சொந்த மக்கள் 80 ஆயிரம்பேரை கொலை செய்தவர்கள். எனவே கடந்தகால யுத்தத்தைப்பற்றி கதைத்தேனே ஒழிய தவறாக  கதைக்கவில்லை என்றார் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59