'பலவீனமான அரசாங்கம் தோற்றம் பெறுவது பயனற்றதாகும்': மஹிந்த

Published By: J.G.Stephan

22 Jun, 2020 | 04:58 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கைத்திட்டங்களை செயற்படுத்தும் அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும். தேசிய அரசாங்கத்தை போன்று  பலவீனமான  அரசாங்கம் தோற்றம்  பெறுவது பயனற்றதாகும். பொருளாதாரத்தை முன்னேற்றமடைய செய்யும் எவ்வித கொள்கை திட்டங்களும் எதிர் தரப்பினரிடம் கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

குருநாகல்- வதுராகல  பிரதேசத்தில் இன்று, திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

  ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் கத்தோலிக்கமத தலைவரை அவமதிக்கும் விதத்தில் கருத்துரைத்துள்ளதாக அறிய முடிகிறது. மதம், மற்றும் மத தலைவர்களை அவமதிக்கும் விதத்தில் செயற்படுபவர்கள்   அழிவினை நோக்கி பயணிக்கிறார்கள் என்றே  கருத   வேண்டும். அந்த  அழிவு  அவர்கள் சார்ந்துள்ள  கட்சியினையும் சாரும்.

 இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிப் பெறும். இந்த வெற்றி சாதரணமாக அமைய கூடாது மாறாக பலம் பொருந்தியதாக இருக்க வேண்டும்.  ஜனாதிபதியின் கொள்கைத்திட்டங்கள்  சுபீட்சமான  எதிர்காலத்தை நோக்கியதாக  உள்ளது.  இந்த திட்டங்களை  நடைமுறைப்படுத்தினால் மாத்திரமே முன்னேற முடியும்.

 முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க  தலைமையிலான  தேசிய அரசாங்கம் பலவீனமானது. இரண்டு தலைவர்களும் முரண்பட்டுக் கொண்டமையினால் முழு அரசசெயலொழுங்கும் பலவீனமடைந்தது. இவ்வாறான  நிலைமையினையே மீண்டும் தோற்றுவிக்க ஐக்கிய மக்கள் சக்தியினர் முயற்சிக்கிறார்கள்.  தேசிய அரசாங்கத்தை போன்று முரண்பட்ட அரசாங்கம்  மீண்டும் தோற்றம் பெற்றால்  நாட்டு மக்களே பாதிக்கப்படுவார்கள்.

ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும். ஐக்கிய தேசிய கட்சி ரணில் அணி, சஜித் அணி என இரண்டாக பிளவுப்பட்டுள்ளது வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை  முன்னேற்றுவது, தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது ஆகிய விடயங்கள்  தொடர்பில் எவ்வித   திட்டங்களும் கிடையாது. இரு  தரப்பினரும் கட்சியின்   உள்ளக பிரச்சினைகளுக்கு  தீர்வு  காண முரண்பட்டுக் கொள்கிறார்கள்.   இவர்களிடம் ஆட்சியதிகாரம் சென்றால் அது  பயனற்றதாகவே  அமையும்   .

  பொதுத்தேர்தலில்  மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான ஆசனங்களை  கைப்பற்றி பலமான அரசாங்கத்தை  ஸ்தாபிப்பதே எமது பிரதான  இலக்கு.  ஜனாதிபதி தேர்தலில் அரசியல் ரீதியில் மக்கள் எடுத்த தீர்மானத்தை பொதுத்தேர்தலில்  எடுத்து  பலமான அரசாங்கத்தை  தோற்றுவிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22