இங்கிலாந்தில் கத்திக் குத்தை மேற்கொண்டவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Published By: J.G.Stephan

22 Jun, 2020 | 09:48 AM
image

இங்கிலாந்திலுள்ள பூங்காவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில் பலர் காயமடைந்திருந்தனர். இந்நிலையில் குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர் தொடர்பில் பல்வேறு தகவல்கள் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபர் 25 வயதுடைய இளைஞர் என்று ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகிய போதிலும் பின்னர் வெளிப்பட்ட தகவல்களின் படி, அவரது பெயர் கைரி சதல்லா (வயது 25) 16 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளார்.

விடுதலையாவதற்கு முன்னர் மனஉளைச்சல் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைக்களுக்காக சிகிச்சை பெற்று உள்ளார்.

இதேவேளை, கடந்த 2018 ஆம் ஆண்டில் வன்முறை நிகழ்த்தியதாக குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் அவருக்கு ஐந்து ஆண்டுகள் இங்கிலாந்தில் வசிக்க அனுமதி வழங்கப்பட்டது.

சிரியாவுக்கு செல்ல வேண்டும் என்ற இவரது ஆர்வம் காரணமாக கடந்த ஆண்டு சில மாதங்கள் இங்கிலாந்தின் உளவு அமைப்பின் கண்காணிப்பு வட்டத்தில் இருந்துள்ளார். 

வன்முறைக்கான குற்றச்சாட்டுகளும் உளவியல் பிரச்சினையும் உள்ள  ஒரு இளைஞரை இங்கிலாந்து ஏன் மேலும் 5 ஆண்டுகள் தங்கிக்கொள்ள அனுமதித்தது என்ற கேள்வி தற்போது முன்வைக்கப்படுகிறது.

ஆனால் லிபியாவில் பயங்ரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், சதல்லா அங்கிருந்து தப்பித்துக்கொள்ள இங்கிலாந்து வந்ததாகவும், அவர் கிறிஸ்தவ மதத்தை தழுவியதாகவும் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், இங்கிலாந்தின் தென்கிழக்கில் உள்ள ரீடிங் நகரிலுள்ள போர்பரி பூங்காவில் குறித்த இளைஞனால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தில் 3 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47