ஜனாதிபதியும் பிரதமரும் முரண்பாடின்றி இணைந்து செயற்படுவதற்கான சூழ்நிலைமை மக்கள் மீண்டும் வழங்க வேண்டும்: பிரதமர்

Published By: J.G.Stephan

21 Jun, 2020 | 05:43 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தனிப்பட்ட குடும்பத்தை இலக்காகக் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தற்போது நகைச்சுவைக்குள்ளாகியுள்ளது. முத்துறை அதிகாரத்தினை கேள்விக்குட்படுத்தியுள்ள இதனை மாற்றியமைக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனான அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

குருணாகலை - வாரியபொல  பிரதேசத்தில்  இன்று இடம் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் வீழ்ச்சியடைந்துள்ள தேசிய பொருளாதாரம் மீண்டும் எம்மால் பலப்படுத்தப்படும். 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றம்  ஏற்பட்டது. எமது ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டு  தேவையற்ற விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டன. 2019ம் ஆண்டு  பலவீனமான பொருளாதாரத்தை கொண்ட ஆட்சியை மீண்டும் பொறுப்பேற்றுள்ளோம். இந்த சவாலை  வெற்றிக்கொள்ள தாயாரா உள்ளோம்.

தேசிய பொருளாதார வீழ்ச்சியினால் பல துறைகளில் பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.   கோத்தாபய ராஜபக்ஷ  ஜனாதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தை கலைத்து  பொதுத்தேர்தலுக்கு உடன் செல்வதற்கு முயற்சித்தோம்.  ஆனால் அரசியலமைப்பின் 19வது திருத்தம் அதற்கு தடையாக இருந்தது. நெருக்கடியான நிலையில் அரச நிர்வாகத்தை  முன்னெடுக்க  கடன் பெறும் எல்லை அதிகரிக்கும் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

   கடன் பெறும் எல்லையை அதிகரிக்கும் யோசனைக்கு எதிர்தரப்பினர் ஆதரவு  வழங்கவில்லை. ஆகவே பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் அரச நிர்வாகத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாது என்ற நிலை உறுதியானது . இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

ஜனாதிபதியும் பிரதமரும் முரண்பாடற்ற விதத்தில் இணைந்து செயற்படுவதற்கான சூழ்நிலைமை மக்கள் மீண்டும்  வழங்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09