அவுஸ்திரேலியாவில் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்புகள் நிறைவடைந்து வாக்கு எண்ணுதல் தற்போது ஆரம்பித்துள்ளது.

இன்று இடம்பெற்ற தேர்தலில் 10 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

குறித்த தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியாக திகழும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இத்தேர்தலில் கன்சர்வேடிவ் கூட்டணி வெற்றி பெறும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த தேர்தலில் 1 கோடியே 52 லட்சம் பேர் வாக்களிப்புக்கு தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.