பொத்துவில் பிரதேசத்தில் பலாத்காரமாக இடம்பெறும் காணி அளவீடுகளை உடன் நிறுத்த வேண்டும் -ரிஷாட் கோரிக்கை

Published By: Digital Desk 3

21 Jun, 2020 | 01:18 PM
image

பொத்துவில்லில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மக்களிடம் எதுவுமே தெரிவிக்காது, திடீரென அந்தப் பிரதேசத்துக்குச் சென்று, காணிகளை அளவீடு செய்வதும், அந்த இடத்தில் பாதுகாப்பு படையினரையும் கொண்டுசென்று, மக்களை பீதிக்குட்படுத்தும் தொல்பொருளியல் திணைக்களத்தின் செயற்பாடுகளையும் தான் வன்மையாகக் கண்டிப்பதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

“பொத்துவில் பிரதேசத்தில் காணி அளவீடு செய்வதற்கு முஷர்ரப் என்பவர் தடையாக இருப்பது நியாயமா?” என ஊடகவியலாளர் ஒருவர், நேற்று (20.06.2020) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் கேள்வி எழுப்பியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“பலாத்காரமாகவும் அடாத்தாகவும் அங்கு சென்று, மக்களின் பூர்வீகக் காணிகளை அளவீடு செய்வதனால்தான் இவ்வாறான பிரச்சினைகள் எழுகின்றன. இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, முதலில் பிரதேசவாழ் மக்களோடு பேசவேண்டும். குறிப்பாக பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் வாயிலாக பள்ளி நிர்வாகம், மக்களின் பிரதிநிதிகளுக்கு இதனை தெளிவுபடுத்துவதோடு, அவர்களின் கருத்துக்களையும் உளவாங்கியிருக்க வேண்டும்.

மக்களின் பூர்வீக விடயங்கள், உறுதிப்பத்திரம் மற்றும் இதுதொடர்பிலான ஆவணங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும். இவ்வாறு முறையான செயற்பாடுகளை மேற்கொண்ட பின்னரே, இதுதொடர்பிலான நடவடிக்கை எடுப்பது சரியானது” என்று கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47