பொறுமை காக்குமாறு முஸ்லிம் மக்களிடம் வேண்டுகோள்

Published By: Raam

02 Jul, 2016 | 05:25 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்தவாரம் ஊடகமொன்றுக்கு தெரிவித்த கருத்தானது, இஸ்லாம் சமயம் மீது மேற்கொண்ட மாபெரும் மதநிந்தனையாகும். எனினும் அவ்விடயத்தில் முஸ்லிம்கள் வெகுண்டெழுந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாது பொறுமை காக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ் ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் தெரிவித்துள்ளார்.அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இஸ்லாம் சமயத்தை நிந்திக்கும் வகையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் தற்போது பல்வேறுபட்ட எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இவ்வாறான நிலையிலேயே  முஸ்லிம்களை பொறுமை காக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ் ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் வெளியிட்டிருக்கும் கருத்து மாபெரும் மத நிந்தனை என்பதை எவரும் மறுக்க முடியாது. அது தொடர்பில் உரிய தரப்பிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளதுடன் சட்ட நடவடிக்கை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆகவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களாகிய நாம் வெகுண்டெழுந்து ஆத்திரமடைந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக்கூடாது. அல்-குர்ஆன் மற்றும் ஸுன்னா வழிகாட்டியுள்ள அடிப்படையிலும் ஹுதைபிய்யாவின் படிப்பினைகளை முன்நிறுத்தியும் பொறுமையுடனும் நிதானத்துடனும் நிலைமைகளை கையாள வேண்டும். கடந்த காலங்களில் நாம் எதிர் நோக்கிய பிரச்சினைகளின் போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டலின் கீழ் பொறுமை கடைப்பிடிக்கப்பட்டதையும் அதன் பலாபலன்களை சமூகம் கண்டுகொண்டதையும் அறிவோம். அவ்வாறே தற்போதைய நிலைமையையும் அணுக வேண்டும்.

மேலும் சந்தர்ப்பம் எதிர்பார்த்திருக்கும்  குழப்பவாதிகளுக்கு எமது எதிர்ப்பு நடவடிக்கைகள் சில வேளைகளில் துணையாக அமைந்து விடும். எனவே  அதற்கு நாம் ஒருபோதும் வழியமைக்கக்கூடாது.. ஆகவே  நாம் பொறுமையோடும் அவதானத்தோடும் இருந்துகொள்ள வேண்டும் எனவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47