SLT  குழுமம் - கொவிட் - 19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு ரூபா 50 மில்லியன் நன்கொடை

20 Jun, 2020 | 09:06 PM
image

ஸ்ரீலங்கா ரெலிகொம் (SLT) நிறுவனத்தின் தலைவர், பணிப்பாளர் சபையினர், முகாமைத்துவப் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து, ரூபா 50 மில்லியன் பெறுமதியான காசோலை ஒன்றை, இலங்கையின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்விடம் கையளித்துள்ளனர்.

இது, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் கோவிட் 19 சுகாதார சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

SLT குழுமத் தலைவர் திரு. ரொஹான் பெர்னாண்டோ ஜனாதிபதியிடம் காசோலையை கையளிக்கும் காட்சி

ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் மொபிடெல் என்பன, தேசத்தின் முன்னணி தொலைத் தொடர்புத் தீர்வு வழங்குநர்கள் என்ற ரீதியில், அரசாங்கத்தின் சவால்களுக்கு முகம் கொடுக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருகின்றன.

இந்த நிதி நன்கொடைக்கு மேலதிகமாக, குழுமம் என்ற ரீதியில் சுமார் 350 மில்லியனுக்கும் அதிகம் பெறுமதியான பல்வேறு தொழில்நுட்பத் தீர்வுகளையும் பெற்றுக்கொடுத்து, முக்கிய பிரிவுகளில் நாட்டின் பொருளாதார செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னணியாக செயற்பட உறுதியளித்துள்ளது.

அண்மையில் அமுலில் இருந்த Lockdown மற்றும் ஊரடங்குச் சட்ட காலப்பகுதிகளின் போது, SLT மற்றும் மொபிடெல் ஆகியன எந்தவித பாதிப்புக்களும் இல்லாமல், தமது சேவைகளைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொடுத்து, அனைவரையும் தரவு, குரல் மற்றும் மொபைல் தீர்வுகள் மூலம் இணைத்து வைத்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58