ஜனாதிபதியின் 71 ஆவது பிறந்ததினம் இன்று..

Published By: J.G.Stephan

20 Jun, 2020 | 09:59 AM
image

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் 71 ஆவது பிறந்தநாள் இன்றாகும். 1949 ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி பிறந்த கோத்தாபய ராஜபக்ஷ, கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்றவராவார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரராவார்.

இராணுவ அதிகாரியாக சேவையாற்றிய அவர் பின்னர் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்டு 30 வருட கொடிய யுத்தத்தை நிறைவு செய்வதற்கு பிரதான பங்களிப்பை வழங்கியிருந்தமையும் குறிப்பிடதக்கது. 

பின்னர் பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு மேலதிகமாக நகரபுற அபிவிருத்தி செயலாளர் பதவியை வகித்து யுத்தத்தின் பின்னர் நகர அலங்கார மற்றும் நகர்புற அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை பெற்றுக் கொடுத்து சிறந்த சேவையை பெற்றுக் கொடுத்திருந்தார்.

கடந்த வருடம் இடம்பெற்ற  ஜனாதிபதி தேர்தலில் பாரிய வெற்றியை பெற்ற கோத்தாபய ராஜபக்ஷ இந்நாட்டின் 8 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கையின், 8ஆவது ஜனாதிபதியான கோத்தாபய ராஜபக்ஷ தொடர்பிலானதோர் கண்ணோட்டம்....

*1971 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட இவர், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கற்கை தொடர்பான பட்டம் பெற்றுள்ளார்.

*இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற உயர் பயிற்சிகளில் பங்கேற்றுள்ளதுடன், யுத்தத்தில் ஆற்றிய அளப்பரிய சேவைக்காக 'ரண விக்ரம' மற்றும் 'ரணசூர' முதலான பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

*1991 ஆம் ஆண்டு லெப்டினன் கேணலாக இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில்  தகவல் தொழில்நுட்ப நெறியை கற்று, அமெரிக்காவுக்கு சென்ற அவர் கலிபோர்னியா லொயெலா சட்ட பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில் நுட்பதுறையில் பணியாற்றினார்.

*2005 ஆம் ஆண்டு தமது சகோதரரான மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியானதன் பின்னர், நாட்டின் பாதுகாப்பு செயலாளராக  பணியை ஆரம்பித்த தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் பெரும் பங்காற்றினார்.

*2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிட்ட அவர், நாட்டின் 8 ஆவது ஜனாதிபதியாக தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19