சச்சின் ஓய்வு குறித்து கேரி கேர்ஸ்டன் வெளிட்டுள்ள புதிய கருத்து

Published By: Gayathri

19 Jun, 2020 | 04:51 PM
image

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான, சச்சின் டெண்டுல்கர் 2007 ஆம் ஆண்டிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலக விரும்பினார் என, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்றுநரான தென் ஆபிரிக்காவின் கேரி கேர்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

1989 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகத்தை தனது 16 ஆவது வயதிலேயே கொண்டிருந்த சச்சின் டெண்டுல்கர், சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக விளங்கினார். மேலும், பல எண்ணற்ற சாதனைகளைப் படைத்து கிரிக்கெட்டில் ஜாம்பவானாக உள்ளார். 

சச்சின் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் மத்திய துடுப்பாட்ட வரிசையில் விளையாட சச்சினுக்கு நெருக்கடி அளிக்கப்பட்டது. 

அப்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுநரான அவுஸ்திரேலியாவின் கிரேக் செப்பலின் ஆலோசனைக்கேற்ப மாற்றியமைக்கப்பட்ட துடுப்பாட்ட வரிசை, சச்சினுக்கு திருப்தியளிக்கவில்லை. 

அந்த உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி லீக் ஆட்டங்களில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளிடம் மோசமாக தோல்வியடைந்து, முதல் சுற்றுடன் வெளியேறியது. அத்துடன் கிரேக் செப்பலின் பயிற்றுநர் பதவியும் பறிபோனது.

துடுப்பாட்ட வரிசையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அதிருப்தியடைந்த சச்சின், 2007 இல் கிரிக்கெட்டிலிருந்து விலக நினைத்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுநராகவிருந்த கேரி கேர்ஸ்டன் தற்போது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேர்ஸ்டன் சமூக வலைத்தளமொன்றுக்கு அளித்த பேட்டியில்,

 

‘‘இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுநர் பொறுப்பை நான் ஏற்றபோது, கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக சச்சின் விரும்பினார். தனக்கு பொருத்தமான துடுப்பாட்ட வரிசையில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் அவர் ஓய்வு பெற நினைப்பதாக நான் அறிந்தேன்.

இதையடுத்து, அவர் விரும்பிய இடத்தில் விளையாட அனுமதித்தேன். அடுத்த 3 ஆண்டு காலத்தில் 18 சர்வதேச சதங்களை அடித்து அசத்தினார். அத்துடன் நாங்கள் 2011 இல் உலகக் கிண்ணத்தை வென்றோம். 

இந்திய அணியினுடனான எனது பயிற்றுநர் பயணம் மிகவும் சிறப்பாக அமைந்தது. வீரர்கள் செளகரியமாகவும், சிறப்பாகவும் செயற்படுவதற்குரிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கும் பணியை நான் சரியாக கவனித்து வந்தேன்’’ என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05