ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த பெண்ணொருவர் மோதரை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

மோதரை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்போது பெண்ணிடமிருந்த 6 கிராமும் 950 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

23 வயதுடைய மோதரை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.