தேவையான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் உரிமை மக்களுக்கு கிடைத்துள்ளது - பிரதமர் மஹிந்த

18 Jun, 2020 | 10:23 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தமக்கு தேவையான அரசாங்கத்தை  ஸ்தாபிக்கும்  உரிமை மக்களுக்கு தற்போது கிடைத்துள்ளது.  சுகாதார  பாதுகாப்பு அறிவுறுத்தல்களை  பின்பற்றி தேர்தல் பிரச்சார நடவடிக்கைளை முன்னெடுப்பது அனைத்து வேட்பாளர்களினதும்  பொறுப்பாகும் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  அறிக்கை   வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில்  மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பொதுத்தேர்தலில் நல்லாட்சி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் முன்னெடுக்கும் தேர்தல் பிரச்சாரம் குறித்து  மக்கள் அதீத கவனம் செலுத்த வேண்டும். போலியான வாக்குறுதி,  பலவீனமான அரச   நிர்வாகம் ஆகியவை  கடந்த அரசாங்கத்தின்   பெறுபேறு .  அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தை   சாதகமாக பயன்படுத்திக் கொண்டு  எதிர் தரப்பினர்  அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாராளுமன்றத்தில் பலவீனப்படுத்தினார்கள்.  இவ்வாறான நிலைமைகள் பொதுத்தேர்தலின் ஊடாக திருத்தப்படும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் மக்களின் வாக்குறிமை   மறுக்கப்பட்டன. உள்ளுராட்சி மன்ற தேர்தல்   எமது போராட்டத்தின் வெற்றியாகும். அரசியல் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளன.  பொதுத்தேர்தலை  பிற்போட  எதிர் தரப்பின் முன்னெடுத்த  சூழ்ச்சி நீதிமன்றத்தால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.  

   உள்ளுர் மற்றும் சர்வதே தரப்பின் அரசியல் சூழ்ச்சியின் விளைவாகவே 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சி மாற்றத்தின் பலனை மக்கள் பெறவில்லை.  2019ம் ஆண்டு அரசியல் ரீதியில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டது. இருப்பினும் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிரான தவறான குற்றச்சாட்டுக்கள் முடிவடையவில்லை.

   2019ம் ஆண்டு  ஜனாதிபதி தேர்தல் நிறைவுப் பெற்று ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தின் ஆதரவு இல்லாத நிலையில்   அரச நிர்வாகத்தை முன்னெடுக்கும் போது   தவறான குற்றச்சாட்டுக்கள்   முனவைக்கப்பட்டன.  கொழும்பில் உள்ள யாசகர்கள்.   முகாம்களில் அடைக்கப்படுவதாகவும் ,  புகையிரதங்களில் யாசகம் பெறுபவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் பல்வேறு போலியான  செய்திகள் குறிப்பிட்டப்பட்டன.

   அரசாங்கத்தை  சர்வதேச மட்டத்தில் நெருக்கடிக்குள் உள்ளாக்கும் வகையில்   கொழும்பில் உள்ள தூதரக அதிகாரியின் கடத்தல் நாடகம் அரங்கேற்றப்பட்டன.  இந்த கடத்தல் விவகாரம் பொய்யானது என்று     உறுதிப்படுத்தப்பட்டது. ஜனாதிபதி, அரசாங்கம் போராட்டங்களில் ஈடுப்படுபவர்களை  தாக்கவும் இல்லை, ஜனநாயகததுக்கு எதிராக செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை.

    கடந்த அரசாங்கம்   பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால கணக்கறிக்கை  மூன்று மாதங்களை வரையறுத்ததாக  இருந்தது. இதன்  காரணமாக  கடன்பெறும் எல்லையை அதிகரிக்கும் பிரேரணையை    பாராளுமன்றத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 20ம் திகதி  கொண்டு  வந்தோம். ஆனால் எதிர்தரப்பின்  அரசியலமைப்பின் 19வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  விடயங்களை தமக்கு  சாதகமாக பயன்படுத்தி அரசாங்கத்தின் செயற்பாட்டை பாராளுமன்றத்தில்  பலவீனப்படுத்தினார்கள். இருப்பினும் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள நிதி அதிகாரத்தை  கொண்டு அரச நிர்வாகத்துக்கு தேவையான நிதி ஒதுக்கிக் கொள்ளப்பட்டது.

இவ்வாறான    பின்னணியில்   பூகோள  மட்டத்தில்  தாக்கத்தை ஏற்படுத்திய  கொவிட்-19 வைரஸ் தாக்கம்   இலங்கையிலும்   தாக்கத்தை ஏற்படுத்தியது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த  ஜனாதிபதி  முன்னெடுத்த  நடவடிககைகள்  முறையாக செயற்படுத்தப்பட்டமையினால்     வைரஸ்  பரவலை   கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்துள்ளது. ஹொங்கொங், தாய்வான்,  ஆகிய  நாடுகள் கொவிட்- 19 வைரஸ்  தாக்கத்தை  வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளன.

  கொவிட் -19  வைரஸ் தாக்கத்தினால் ஹொங்கொங் நாட்டில் 4 பேரும், தாய்வான் நாட்டில் மூவரும்,   நியூஸ்லாந்து நாட்டில் 22 பேரும்   எமது நாட்டில் 11 பேரும் மரணித்துள்ளார்கள்.   வியட்நாம் நாட்டில் இதுவரையில்   எவரும்  வைரஸ் தொற்றுக்குள்ளாகி   மரணிக்கவில்லை.  .  வியட்நாம் , தாய்வான், மற்றும்  ஹொங்கொங் ஆகிய நாடுகள் 2003ம் ஆண்டு  பரவிய சார்ஷ்  வைரஸ் தாக்கத்தினால் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இதன் அனுபவத்தை கொண்டு இந்நாடுகள் கொவிட்-19  வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. ஆனால்  நாம் யுத்தத்தை தவிர எவ்விதமான   வைரஸ்  தாக்கங்களுக்கும் இதுவரை காலமும்  முக்ம் கொடுக்கவில்லை.  எமது அரசியல் வரலாற்றில் தற்போதைய நிலைமை  புதியதாக அமைந்துள்ளது.

 பாரிய  போராட்டங்களுக்கு மத்தியில் கொவிட்- 19 வரைஸ் சமூக தொற்றாக பரவலடைவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  ஊரடங்கு சட்டம்  தளர்த்தப்பட்ட பின்னர்  ஒரு  தரப்பினர்   அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் விதத்தில் அமெரிக்க தூதரகத்தின் முன்னாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.  இந்த போராட்டத்தின் நோக்கம் 2015ம் ஆண்டு  ஆட்சி மாற்றத்தை   ஏற்படுத்த  எதிர் தரப்பினர் முன்னெடுத்த அரசியல் பிரச்சாரங்களை மீளுருவாக்கம் செய்யும் விதமாக அமைந்தது.

  2015ம் ஆண்டு  நல்லாட்சி அரசசாங்கம்  என்ற பெயரில் செயற்பட்ட அரசாங்கத்தில் மக்கள்  பல நெருக்கடிகளை எதிர்க் கொண்டார்கள்.   நாளாந்தம் போராட்டம், கண்ணீர் புகை தாக்கம்,   வீதிகளில் போராட்டம் ஆகியவை   எதிர்பார்க்கப்படும் ஒன்றாகவே இருந்தது. போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் வன்மையாக தாக்கப்பட்டார்கள்.   அமெரிக்க தூதரக போராட்டத்தை அமரர் ஆறுமுகம் தொண்டமாயின்  இறுதி கிரிமை கூட்டத்துடன் ஒப்பிட்டு குறிப்பிடப்படும்   கருத்துக்க்ள் வெறுக்கத்தக்கது.

 கொவிட்- 19   வைரஸ் பரவலை கட்டுப்படுத்த   நாடுதழுவிய  ரீதியில் இரண்டு மாத  காலம்  ஊரடங்கு சட்டம்  அமுல்படுத்தப்பட்டது.  பொருளாரார ரீதியில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நெருக்கடியான நிலையிலும் 5000ஆயிரம்  வழங்கப்பட்டது. இதனையும்  முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்   சஜித்   பிரேமதாஸ    நகைப்புக்குள்ளாக்கினார்.  இந்த வைரஸ்   பரவலின் போது   நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால்  நாடு எந்நிலையில் இருக்கும் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

  நல்லாட்சி அரசாங்கத்தின் முறைக்கேடு, போலியான வாக்குறுதி ஆகியவற்றை கருத்திற் கொண்டு மக்கள் பொதுத்தேர்தலை எதிர்க் கொள்ள வேண்டும். சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றி  தேர்தல் பிரச்சார நடடிக்கையில் ஈடுப்படுவது அனைத்து  வேட்பாளர்களின்  கடமையாகும். தமக்கான அரசாங்கத்தை  தெரிவு  செய்யும் உரிமை    தற்போது மக்களுக்கு கிடைத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02