ஜனாதிபதி கோத்தாவுக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!

18 Jun, 2020 | 10:04 PM
image

சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வரவிருக்கும் பிறந்தநாளை முன்னிட்டு,  வாழ்த்துக்களை தெரிவித்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

Image

மேலும் இலங்கையில், கொரோனா வைரஸ் என்ற கொவிட் 19 ஐ கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கையை முன்னெடுத்தமைக்காகவும்  சீன ஜனாதிபதி தமது கடிதத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Image

Image

இலங்கைக்கான சீனாவின் பதில் தூதுவர் ஹூ வை இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தார். 

எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி ஜனாதிபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங் அவர்கள் அனுப்பி வைத்த கடிதத்தை பதில் தூதுவர் ஜனாதிபதியிடம் வழங்கினார்.

கொவிட் 19 நோய்த் தொற்றுக்கு எதிராக இலங்கை முன்னெடுக்கும் விசேட வேலைத்திட்டங்கள் சீன ஜனாதிபதியின் பாராட்டை பெற்றுள்ளதென சீன தூதுக் குழுவினர் தெரிவித்தனர்.

இலங்கையில் வைரசை கட்டுப்படுத்துவதற்கு பங்களிப்பு செய்யும் வகையில் சீன அரசு மருத்துவ உதவிப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. அவை சுகாதார அமைச்சுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், நிவாரண உதவிகள் அடங்கிய பட்டியல் பதிற் தூதுவரினால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

நெருக்கடிக்குள்ளான இச்சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு உதவியமை தொடர்பாக கோத்தாபய ராஜபக்ஷவால் ஜனாதிபதி ஷீக்கும் சீன மக்கள் மற்றும் சீன நிறுவனத்திற்கும் தனது நன்றிகளை தெரிவித்தார். 

சீனா மற்றும் இலங்கை கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களை இனங்காணுவதற்காக ஒரே மாதிரியான வழிமுறைகளை பின்பற்றியுள்ளதென சீனத் தூதுக்குழு குறிப்பிட்டது. 

இந்நெருக்கடியை சிறப்பாக கட்டுப்படுத்துவதற்கு இரு நாட்டினதும் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் அர்ப்பணிப்பே காரணமாகும் என்றும் தூதுக்குழு குறிப்பிட்டது.

உலகளாவிய தொற்று நோயின்முன் இருநாடுகளும் பரஸ்பரம் பாரிய உதவிகளை செய்துகொண்டது. இவ்வருடத்தில் பெப்ரவரி ஆரம்பத்தில் சீனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தபோது இலங்கை ஒரு தொகை கறுப்பு தேயிலையை சீனாவிற்கு அன்பளிப்பு செய்த காரணம், தேயிலையில் உள்ள நோய் நிவாரண குணாம்சத்தை கருத்திற்கொண்டேயாகும். 

அது மட்டுமன்றி சீனாவில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்காக ஆசி வேண்டி நாடு பூராகவும் பிரித் பாராயணம் ஒலிக்கப்பட்டது. கொழும்பு தேவி பாலிக்கா வித்தியாலயத்தின் மாணவர்கள் தமது சகோதரத்துவ உணர்வை வெளிப்படுத்தும் வகையில் வரையப்பட்ட பல ஓவியங்களை சீன ஜனாதிபதியின் பாரியார் பென்ங் லியுவானுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அந்நடவடிக்கை அவரின் பாராட்டைப்பெற்றது.

இந்நாட்களில் பீஜிங் நகரத்தின் நிலை பற்றி தெளிவுபடுத்திய தூதுக்குழு, சுமார் நூறு பேரளவில் தொற்றுக்குள்ளாகியிருந்தபோதும், தற்போது இந்நிலை கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டது. நோயின் ஆரம்பத்தை மிக விரைவாக கண்டு பிடிப்பதற்கு சீன அதிகாரிகள் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். 

வைரஸ் பரவியது நபர்களுக்கிடையிலன்றி, ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டின் மீனின் மூலமேயாகும். இந்நிலை பற்றி உலக சுகாதார அமைப்பு அவதானத்துடன் இருப்பதாகவும் தூதுக்குழு குறிப்பிட்டது.

இருதரப்பினரும் மேலும் பல துறைசார் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினர். சீனாவின் தேயிலை ஏல விற்பனை, உலகின் சிறந்த தேயிலை என பிரசித்தி பெற்றுள்ள இலங்கை தேயிலையை சீனாவில் பிரபல்யப்படுத்துதல் தொடர்பாகவும் அவதானத்தை செலுத்தியது.

இலங்கையில் சீன முதலீடு மற்றும் இருநாடுகளுக்குமிடையிலான நிதியுதவிகளை அதிகப்படுத்துவது பற்றியும் இதன்போது கலந்துரையாடினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37