நீர், மின் கட்டணங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சலுகை - அஜித் பீ பெரேரா உறுதி

Published By: Digital Desk 3

18 Jun, 2020 | 05:56 PM
image

(செ.தேன்மொழி)

சாராதண மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ள நீர் மற்றும் மின்சார கட்டணங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சிகாலத்தில் சலுகைப் பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா, பொத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிப் பெற்று ஆட்சியமைத்தால் நீர் மற்றும் மின்சார கட்டணங்களை அறவிடபோவதில்லை என்றும் இதுவரையில் யாராவது அந்த கட்டணங்களை செலுத்தியிருந்தால் அந்த பணத்தை மீள செலுத்துவதாகவும் உறுதியளித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொவிட் -19 வைரஸ் பரவலின் காரணமாக மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் பலரது தொழில் வாய்ப்புகள் பறிபோய்வுள்ளதுடன் , வாழ்வாதார பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில்  நீர் மற்றும் மின்சார கட்டணங்கள் மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளன. இது தொடர்பில் மக்களுக்கு சலுகைகளை வழங்குமாறு நாங்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்து வந்த போதிலும் அரசாங்கத்தினால் எந்தவித நடவடிக்கையும் எடுத்துள்ளதாக தெரியவில்லை.

வைரஸ் பரவலின் காரணமாக அனைவரும் வீட்டில் இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்ததனால், அக்காலப்பகுதிகளில் மின்சார கட்டணம் மற்றும் நீர் கட்டணம் என்பன வழமைக்கு மாறாக இரண்டு , மூன்று அல்லது நான்கு மடங்காக அதிகரித்துள்ளன.

அனைவரும் வீட்டில் இருந்தமையினால் மின்சாரம், நீரின் பாவணைகள் வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளன. இதனால் கட்டணத் தொகையும் அதிகரித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் நாம் ஆராய்ந்து பார்த்தில் கட்டணம் தொடர்பான திட்டமிடலின் போது சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இது தொடர்பில் நாங்கள் தெளிவுப்படுத்தியும் அரசாங்கம் எந்தவித கவனமும் செலுத்தவில்லை.

இந்நிலையில் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிப் பெற்று ஆட்சியமைத்தால். சாராதண மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அசாதாரண முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நீர் மற்றும் மின்சார கட்டணங்களை அறவிடபோவதில்லை.

அதனால் இதுவரையும் இந்த கட்டணங்களை செலுத்தாமல் இருப்பவர்கள் தொடர்ந்தும் செலுத்த வேண்டாம். அவ்வாறு எவரேனும் கட்டணங்களை செலுத்தியிருந்தால் எங்களது ஆட்சிகாலத்தில் அந்தக் கட்டணத் தொகையை உரிய தரப்பினப்பிருக்கு மீள செலுத்தவும் நடவடிக்கை எடுப்போம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11