மைத்திரியுடன் டீல் வைத்திருந்தவர்களே எம்மிலிருந்து பிரிந்து சென்றுள்ளனர் - ரவி

Published By: Digital Desk 3

18 Jun, 2020 | 05:26 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

115 ஆசனங்களை பெற்று அரசாங்கத்தை அமைப்போம். ஐக்கிய தேசிய கட்சி தூய்மையாக்கப்பட்டுள்ளதால் எம்மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது.

மத்திய வங்கி மோசடி காரர்கள் யாரும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் இல்லை. மைத்திரிபால சிறிசேனவுடன் டீல் வைத்துக்கொண்டிருந்தவர்களே எம்மில் இருந்து பிரிந்து சென்றிருக்கின்றனர் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொதவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொதுத் தேர்தலில் 115க்கும் அதிக ஆசனங்களைப் பெற்று ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்கலாம் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது.

தற்போது ஐக்கிய தேசிய கட்சி தூய்மையாக்கப்பட்டிருக்கின்றது. அதனால் மக்களுக்கு எம்மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது. அவ்வாறு பெரும்பான்மையை பெறுவதில் குறைவு ஏற்பட்டால், பெரும்பான்மையை அமைத்துக்கொண்டு அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்வோம்.  மாறாக வேறுயாரும் அரசாங்கம் அமைக்க ஆதரவளிக்கமாட்டோம்.

கடந்த எமது அரசாங்கத்தில் எம்மால் வாக்குறுதியளிக்கப்பட்ட 10 இலட்சம் தொழில்வாய்ப்பு என்ற இலக்கை அடைந்துகொள்ள முடியாமல் போனது.

எம்மில் இருந்த திறமையற்ற அமைச்சர்களாலும் மத்திய வங்கியின் தடைகளாலுமே இதனை செய்ய முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கோருகின்றோம். தற்போது தேர்தலில் எமக்கு போட்டியாக இருப்பது மொட்டு கட்சி மாத்திரமாகும்.

தேர்தலில் பெரும்பான்மையை பெற்று அரசாங்கம் அமைக்க முயற்சிப்பது ஐக்கிய தேசிய கட்சியும் பொதுஜன பெரமுனவுமாகும். எம்மில் இருந்து சென்று தற்போது கூலி வீட்டில் இருப்பவர்கள் தாய் வீட்டுக்குள் நுழையவே முயற்சிக்கின்றனர். அதுதான் எங்களுக்கும் அவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்.

மேலும் நல்லாட்சி அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேனவுடன் டீல் வைத்துக்கொண்டு செயற்பட்டவர்களே தற்போது எம்மைவிட்டு பிரிந்து சென்றிருக்கின்றனர். அங்கிருந்துகொண்டு மத்திய வங்கி மோசடி தொடர்பாக இவர்கள் எங்கள் மீது விரல் நீட்டுகின்றனர்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான கோப் குழு அறிக்கை மற்றும் மத்திய வங்கி கணக்காய்வு அறிக்கை எதிலும் தற்போது ஐக்கிய தேசிய கட்சியில் இருப்பவர்களின் பெயர் இல்லை. ஆனால்  அந்த அறிக்கையில் 4 பேரின் பெயர் இருக்கின்றது. அந்த நான்குபேரும்  தற்போது மறுபக்கத்தில் இருக்கின்றனர். அதனால் மத்திய வங்கி மோசடியுடன் தொடர்புபட்ட யாரும் சிறிகொதவில் இல்லை என்பதை பொறுப்புடன் கூறுகின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09