யாழில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணிகள் படையினரால் விடுவிப்பு

Published By: Digital Desk 3

18 Jun, 2020 | 04:17 PM
image

(தி.சோபிதன்)

யாழ்ப்பாணத்தில் இன்றுவரை பாதுகாப்பு படையினரால் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

அச்சுவேலியில் நடைபெற்ற வீடு கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இராணுவத்தினராகிய நாங்கள் பாதுகாப்பு விடயம் தொடர்பில் மிகவும் அக்கறையாகவும் தெளிவாகவும் செயற்பட்டு வருகின்றோம். அதிலும் குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மிகவும் அர்ப்பணிப்புடன் பாதுகாப்பு விடயம்தொடர்பில் செயற்பட்டு வருகின்றார். 

அவர் பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் மூன்று தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல கிழக்கு மாகாண மற்றும் ஏனைய மாகாணங்களிலும் இது போன்ற விசேட கூட்டங்கள்  முப்படையினருடன் இடம்பெற்று வருகின்றது.எனவே நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒரு முக்கியமான கூட்டமாக எனக்கு தென்படவில்லை.

ஏனெனில் கடந்த டிசம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கூட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் முப்படையின் பிரதானிகளுடன் குறித்தகூட்டம் யாழ் மாவட்டத்தில் இடம்பெற்றது.

எனவே நேற்றைய தினம் விசேஷமாக ஒன்றும் பேசப்படவில்லை அதிலும் குறிப்பாக காணி விடுவிப்பு பற்றி எந்த விடயமும் அதில் பேசப்படவில்லை. ஏனெனில் நாங்கள் இன்று வரை 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட கபொதுமக்களின் காணிகளை விடுவித்துள்ளோம்.

எங்களால் விடுவிக்கப்படக் கூடிய அனைத்து இடங்களையும் இன்றுவரை  விடுவித்து ள்ளோம் எனினும் எதிர்காலத்தில் பொதுமக்களின்  காணிகளை விடுவிப்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம் எனினும் தற்போதைய நிலைமையில் காணி விடுவிப்பு தொடர்பில் எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31