நீருக்கடியில் நிர்மாணிக்கப்பட்ட முதல் அருங்காட்சியகம் இலங்கையில் திறப்பு

Published By: Digital Desk 3

19 Jun, 2020 | 10:47 AM
image

இலங்கையில் நீருக்கடியில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது  அருங்காட்சியகம் காலியில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மேற்பார்வையின் கீழ், இலங்கை கடற்படையினரால் காலி கடற் பகுதியில் நீருக்கடியில்  குறித்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை குறித்த அருட்காட்சியகம் கவர்ந்துள்ளதாகவும், கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த அருங்காட்சியகம் சிமெந்து மற்றும் முற்றிலும் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களினால் கடற்படை வீரர்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நீருக்கடியில் உள்ள அருங்காட்சியகம் காலி கடற்பகுதியில் சுமார் 50 அடி ஆழத்தில் அமைந்துள்ளது .

நீருக்கடியில் உள்ள அருங்காட்சியகத்தில் புகையிரதப் பெட்டிகளையும், மீன்பிடிப் படகுகளையும் காட்சிக்காக பயன்படுத்த முதலில் முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து , குறுகிய காலத்தில் புகையிரதப் பெட்டிகளையும், மீன்பிடிப் படகுகளையும் சேகரிப்பதில் சிரமம் இருந்ததால் பல்வேறு வகையான சிலைகள் மற்றும் நினைவுப் பொருட்களைப் பயன்படுத்தி அருங்காட்சியகத்தில் கடற்படையினர் காட்சிப்படுத்தியுள்ளனர்.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பவளப்பாறைகளை மீண்டும் உருவாக்குவதும், மீன் வளத்தை அதிகரிப்பதும் ஆகும்.

இப்பகுதியில் மீன் வளர்ப்பு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் எதிர்காலத்தில் டைவ் செய்ய முடியும். 

இலங்கையின் நீருக்கடியில் அமைக்கப்பட்ட முதல் அருங்காட்சியகம் காலியில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருகோணமலை மற்றும் தங்காலை ஆகிய இடங்களில் மேலும் இரண்டு நீருக்கடியில் அருங்காட்சியகங்களை உருவாக்க கடற்படை திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02