Marina Square கட்டுமானப் பணிகள் ஆரம்பம் : புதிய அம்சங்களுடன் மேலும் பல வசதிகள்

17 Jun, 2020 | 09:34 PM
image

Marina Square இன் கட்டுமானப் பணிகள் மே மாதம் 11 ஆம் திகதி திங்கட்கிழமைஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் பொது முகாமையாளர் புத்திக குணரத்ன இதுதொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், ‘கட்டுமாணப் பணிகள் ஒரு சிறிய குழுவுடன்ஆரம்பிக்கப்பட்டு, படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தேவையான அதிகார சபைகளின்அனுமதிகளுக்கு அமைய முழுமையான செயற்பாடுகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாககூறினார்’ அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், ‘கட்டுமான நடவடிக்கைகள் அனைத்தும்முழுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு அமைய தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்சுகாதார மற்றும் ஏனைய அதிகார சபைகளின் நியமங்களுக்கு அமைய முழுமையானஅனுமதிகளைப் பெற்று முன்னெடுக்கப்படுவதாகவும்’ தெரிவித்தார். 

மேலும், Marina Square Development கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பதற்கான அனுமதிகளும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. உலகம் முழுவதுமுள்ள பங்காளிகள் மற்றும் பொருள் வழங்குநர்களுடன் இணைந்து செயற்பட்டு, முழுமையான பாதுகாப்பையும் செயற்திறனையும் முடிந்தளவு உறுதிப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

Marina Square வேலைத் திட்டத்தின் பிரதான ஒப்பந்ததார கட்டுமான நிறுவனப் பிரதிநிதி ஸோ யாங் இதுபற்றிக் கூறுகையில், ‘China Harbour Engineering Company (CHEC) உலகளாவிய ரீதியில் கட்டுமானத்துறையில் ஒரு முன்னணி நிறுவனமாகும். அது, அறிவு, அனுபவம் மற்றும் திறமை உட்பட தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டு செயற்படக்கூடியது. 

அதிகார சபைகளின் அனுமதிகளுக்கு அமைய, தமது செயற்பாடுகளைப் படிப்படியாக அதிகரிக்கும் வசதிகளையும் கொண்ட ஒரு நிறுவனமாகும். பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில் சிறிது தாமதம் ஏற்படலாம். எவ்வாறாயினும், நாம் எமது பங்காளிகள்மற்றும் பொருள் வழங்குநர்களோடு உலகளாவிய ரீதியில் சிறந்த முறையில் இணைந்து செயற்படுவதன் மூலம் இதனை பாதுகாப்பாகவும் செயற்திறனுடனும் முன்னெடுக்க ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்றும் அவர் தெரிவித்தார்.

Access Engineering PLC நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்தோபர் ஜொசுவா இது சம்பந்தமாகக் கருத்து வெளியிடுகையில், ‘ஊரடங்குச் சட்டம் காரணமாக Marina Square வேலைத் திட்டத்தின் பணிகள் முழுமையான நிறுத்தப ;படவில்லை. நாம் அனைவரும் இல்லங்களில் இருந்தவாறே ஒன்லைன் மூலம் கூட்டங்களை நடத்தி, எமது எதிர்கால செயற்பாடுகளை எவ்வாறு முன் னெடுப்பது என்பது தொடர்பாகவும், ஏனைய பல்வேறு நடவடிக்கைகள் பற்றியும் ஆராய்ந ;து வந்துள்ளோம். இந்த நேரத்தில் நாம் பெற்றுக் கொடுக்கக்கூடிய வசதிகளை எவ்வாறு அதிகரிப்பது என்பதில் கவனம் செலுத்தி வருவது பற்றி தற்போதைய மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்கள் அறிந்ததும் மகிழ்ச்சியடைவார்கள்.

Marina Square வேலைத் திட்டத்தின் செயற்பாடுகளை திட்டமிட்ட தினங்களில் பூர்த்தி செய்வதற்குத் தேவையான உபாயகரமான நடவடிக்கைகள் பற்றி நாம் ஆராய்ந்து வருகிறோம். தவறுமிடத்து, ஆகக்குறைந்த காலதாமதத்தில் அதனை முன்னெடுக்கும் வழிவகைகள் பற்றியும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம் என்று கூறினார்.

‘வடிவமைப்புக் குழு Marina Square அபிவிருத்தித் திட்டத்தின் அம்சங்களையும் வசதிகளையும் அபிவிருத்தி செய்வதில் பல்வேறுபட்ட செயற்பாடுகளை மேற்கொண்டு பல புதிய அறிமுகங்களை வழங்கியுள்ளது’

சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷிவங்க டி சொய்சா இந்த விடயம் பற்றிக் கூறுகையில், ‘வடிவமைப்பு மற்றும் அபிவிருத்திக் குழுவானது, Marina Square வீட்டு உரிமையாளர்களின் வசதிகளை அபிவிருத்தி செய்வதிலும், அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்படும் அம்சங்களை மேலும் உயர்த்துவதிலும் அதிக நேரத்தைச ; செலவிட்டுள்ளனர். இதன் பலனாக, புதிதாக இரண்டு ஸ்குவாஷ் விளையாட்டரங்கங்கள், இரண்டு புதிய விழா மண்டபங்கள், ஒரு டேபிள் டென்னிஸ் அரங்கு, ஒரு ஸ்னூக்கர் அரங்கு, சிறுவர்களுக்கான உள்ளக விளையாட்டு அரங்கு, பெரிய கிளப் ஹவுஸ் மற்றும் கொபி பார் என்பனவும் ஏற்கனவே காணப்பட்ட மிக உயர்தரமான மாற்றங்களோடு இணைக்கப்பட்டுள்ளன’ என்றார். 

ஷிவங்க டி சொய்சா மேலும் கூறுகையில், ‘புதிய தொழில்நுட்பத்துடன், Marina Square வீட்டு உரிமையாளர்களுக்கு பாதுகாப்பான ஏற்பாட்டை மேற்கொள்வதோடு, இரண்டு ஏக்கர் அளவிலான வானுயர் திறந்த பூங்காக்களை இதில் உருவாக்கி ஐந்து ஏக்கர் அளவிலான இந்த மொத்த திட்டத்தில் அதனை உள்ளடக்குவதன் மூலம் மீண்டும் இவ்வாறானதொரு ‘‘Lock down ’ நிலைமை ஏற்படும் போது அவர்களுக்கு அதில் எவ்வித பாதகமும் இல்லாமல் வெளிச் செல்லும் வசதிகளைப் பெற்றுக்கொடுக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது’ என்றும் தெரிவித்தார்.

‘புதிய தொழில்நுட்பத்தின் மூலம் இரண்டு ஏக்கர் பூங்காவை எதிர்காலத்தில் எவ்வாறான ‘‘Lock Down’  ஏற்பட்டால் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்படுகின்றது’ திரு. ஜொசுவா மேலும் விபரிக்கையில் ‘எமது முதலீட்டாளர்கள் அனைவருக்கும் நாம் உறுதிப்படுத்தும் மற்றுமொரு விடயம், உங ;களது முதலீடு ஆயசiயெ ளுஙரயசந திட்டத்தில் அதிகளவு அனுகூலங்களைப் பெற்றுக்கொடுக்கும் ஒன்றாக அமைந்திருக்கும் என்பதாகும்.

Marina Square  திட்டமானது, பல்வேறு விதமான சக்திமிக்க பல்தேசிய நிறுவனங்களினால ; உருவாக்கப்பட்டு வருகிறது. அவற்றில் Access Engineering PLC, China Harbour Engineering Company kw;Wk ; மற்றும் Mustafa Singapore ஆகியனவற்றின் ஒன்றிணைந்த நிதி சக்தி மற்றும் வளங்கள் ஆகியனவற்றின ; மூலம் எவ்வாறானதொரு சவால்மிக்க நிலைக்கும் முகம் கொடுக்கக்கூடிய தன்மையை இந்தத் திட்டம் கொண்டிருக்கிறது’ என்று கூறினார்.

‘‘Marina Square ஆனது, மூன்று சக ;தி மிக்க பல்தேசிய நிறுவனங்களினால் வழங்கப்படும் நிதி சக்தி மற்றும் வளங்கள் என்பனவற்றைக் கொண்டிருப்பதனால், எந்தவொரு கடுமையான சவால்களுக்கும் முகம் கொடுக்கத் தயாராக இருக்கிறது’

Marina Square - Uptown Colombo> முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட கலப்பு அபிவிருத்தித் திட்டமாகும். துறைமுகத்தை முன் நோக்கியதாக அமைக்கப்படும் இலங்கையின் முதலாவது மற்றும் மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டம் ஒன்றாகவும், சர்வதேச மட்டத்தில் அங்கீகாரம் பெற்ற மூன்று ஜாம்பவான்களான Access Engineering PLC, China Harbour Engineering Company மற்றும் Mustafa Singapore ஆகிய நிறுவனங்களின் பின்னணியையும் கொண்டிருக்கிறது. 

பல்வேறு கோணங்களிலான இந்தக் கண்கவர் காட்சிகளைக் கொண்ட அதிசொகுசு அடுக்குமாடி வீட்டுக் கட்டமைப்பு மூலம் கொழும்பு நகரை வான் பரப்பின் எழிலையும், இந்து சமுத்திரத்தின் வனப்பையும் புதிதாக அமைக்கப்பட்டு வரும் போர்ட் சிற்றியையும் ஒரே நேரத்தில் கண்டு களிக்கலாம். ஐந்து கோபுரங்களில் 36 மாடிகளில் 1068 வீடுகளைக் கொண்டு செயற்படும் இந ;தத் திட்டம், வட கொழும்பில் கண்கொள்ளாக் காட்சியாக அமையப் பெற்றுள்ளது. 

இந்த அடுக்கு மாடி வீட்டுக் கட்டமைப்பில் வாழ்வதில் மேலும் பல நண்மைகளும் காணப்படுகின்றன. அவற்றை அதிநவீன வீட்டு உரிமையாளர் ஒருவருக்குக் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் கொண்டு எந்தவித சிக்கலும் அற்ற வாழ்க்கை முறையொன்றை ஐந்து ஏக்கர் கொண்ட நிலப்பரப்பில் உருவாக்கி கொடுக்கப்பட்டிருக்கிறது.

மேலதிக விபரங்களுக்கு தயவு செய்து Marina Square - Uptown Colombo  உடன் அல்லது www.marinasquare.lk  இணைய தளத்தில் பிரவேசிக்கவும் அல்லது 076 305 0000 என்றதொலைபேசி இலக்கத்தை அழைக்கவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57