ஒற்றுமையை சீர்குலைத்தவர்களே இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளனர் - ஐ.தே.க. சாடல்

17 Jun, 2020 | 09:17 PM
image

(நா.தனுஜா)

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஒற்றுமையை சீர்குலைத்தவர்களே இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளனர்

தேர்தலில் வெற்றியடைந்த பின்னர் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய தலைவர்கள் கூறுவதிலிருந்து, ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் காணப்பட்ட ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட சதிமுயற்சிக்கு அவர்கள் பலியாகியிருப்பது வெளிப்படுகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுத்தேர்தல் வேட்பாளர் தினசிறி தலகே தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தாவில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

ஜனநாயக நாடொன்றில் ஒரு விடயம் குறித்து தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் கலந்துரையாடியே தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும். எனினும் தற்போது தனியொருவர் மாத்திரம் தீர்மானம் மேற்கொள்ளும் நிலை உருவாகியிருக்கிறது.

சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் பல்வேறு ஜனநாயக முறைமைகளையும் ஐக்கிய தேசியக் கட்சியே அறிமுகம் செய்தது. எனினும் தற்போது பொருத்தமற்றவர்களின் கைகளில் நாடு இருப்பதோடு, தன்னிச்சையான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அடுத்ததாக தேர்தலில் வெற்றியடைந்த பின்னர் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படத்தயார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய தலைவர்கள் கூறுகின்றனர்.

ஏதேனுமொரு கொள்கையில் உடன்படுவதில் தவறில்லை. ஆனால் எந்தவொரு நிபந்தனைகளுமின்றி இவ்வாறு இணைந்து செயற்படுவதென்பது ஜனநாயகத்தையே பாதிக்கும். ஆக, ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்த ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு ஏதோவொரு குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சதிமுயற்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள் பலியாகிவிட்டார்கள் என்பது தெளிவாகின்றது.

அதேவேளை ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வருண ராஜபக்ஷ தற்போது நாட்டில் அதிகரித்துவரும் ஜனநாயகத்திற்குப் புறம்பான செயற்பாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக அண்மையில் அமெரிக்கத்தூதரகத்திற்கு முன்பாக முன்னணி சோசலிஸக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டமை, வாகனக்குத்தகை வழங்கல் கம்பனியின் முறைகேடுகளை வெளிப்படுத்திய தொழிற்சங்கத் தலைவர் படுகொலை செய்யப்பட்டமை, சுதந்திர சதுக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் ஆகியவற்றை அவர் மேற்கோள் காண்பித்தார்.

ஜனாதிபதியின் இல்லத்திற்கு மிகவும் அண்மித்த பகுதியிலேயே தொழிற்சங்கத் தலைவரின் கொலை இடம்பெற்றிருக்கிறது.

பாதுகாப்புப் பலப்படுத்தும் பகுதியில் இடம்பெற்ற இக்கொலை தொடர்பில் அறிந்தும் தடுக்கப்படாமல் இருந்திருக்கிறதா அல்லது ஜனாதிபதிக்கே போதியளவான பாதுகாப்பு இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதேபோன்று சுதந்திர சதுக்கத்தில் தற்கொலை செய்துகொண்டதாகக் குறிப்பிடப்படும் நபரின் மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் காணப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21