ஹொண்டூராஸ் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி

Published By: Digital Desk 3

17 Jun, 2020 | 08:55 PM
image

மத்திய  அமெரிக்க நாடான ஹொண்டூராஸின் ஜனாதிபதி ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

"வார இறுதியில் நான் சில அசௌகரியங்களை உணரத் தொடங்கினேன், இன்று நான் கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று கண்டறியப்பட்டேன்" என்று ஹெர்னாண்டஸ் தொலைக்காட்சி ஒன்றில் ஆற்றிய உரையில் கூறியுள்ளார்.

”ஓய்வெடுக்க பரிந்துரைத்துள்ளனர், ஆனால் நான் தொலைதூரத்தில் இருந்து எனது உதவியாளர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவேன்." என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவரது மருத்துவர்கள் பரிந்துரைத்தபடி, சிகிச்சை பெற அவர் தனிமையில் இருப்பார் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அவரது மனைவி மற்றும் இரண்டு உதவியாளர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹொண்டூராஸில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 9,656 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 330 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25