320 இலட்சம் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் தோல்வி

17 Jun, 2020 | 05:44 PM
image

கிளிநொச்சியில் வடக்கு மாகாண சபையால் 320 இலட்சம் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனம் முற்றுமுழுதாக தோல்வி அடைந்துள்ளது என  கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனம் தோல்வி அடைந்துள்ள விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014,2015  ஆம் ஆண்டுகளில் மாகாண குறிததொதுக்கப்பட்ட நிதியிலிருந்து 320 இலட்சம் ரூபா செலவில்  உப உணவு பயிர்ச்செய்கையை நோக்கமாக கொண்டு மாயவனூர் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனம் எவ்வித பயன்பாடும் இன்றி காணப்படுகிறது.

திட்டம் ஆரம்பிக்கப்படும் போது 115 விவசாயிகள் 100  ஏக்கர் பரப்பளவில்  உப உணவு( நிலக்கடலை, மிளகாய்,)  மேற்கொள்வார்களய் என மதிப்பிடப்பட்டது. ஆனால் பின்னர் 90 பயனாளிகள் 45 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கையை மேற்கொண்டார்கள் தற்போ அவர்களும் அதனை கைவிட்டுள்ள நிலையில் குறித்த திட்டம் தோல்வியடைந்துள்ளது.

மீள்குடியேற்றத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனம் தொடர்பில் சரியான திட்ட மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், குறுகிய நிலப்பரப்பில் உப உணவு பயிர்ச்செய்கைக்காக பெருமளவு நிதி செலவு செய்யப்பட்டுள்ளதாக சில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் எரிபொருள் செலவினை பகிர்ந்து செலுத்துவதில் ஏற்ப்பட்ட சிக்கல் காரணமாக திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக நீர்ப்பாசனம் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51