(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

ஜெனிவாவில் கடந்த மூன்று வாரகாலமாக நடைபெற்றுவந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  32 ஆவது கூட்டத் தொடர்  இன்று நிறைவடைந்தது. 

கடந்த மாதம் 13 ஆம் திகதியிருந்து    இன்று    ஜூலை மாதம் முதலாம் திகதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெற்றது. இதன்போது பல்வேறு நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து கூட்டத் தொடர் முழுவதும் ஆராயப்பட்டது. 

அத்துடன் இலங்கை மனித உரிமை நிலைமை குறித்த வாய்மூல அறிக்கையும் இம்முறை மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் வெ ளியிடப்பட்டது. மேலும் இலங்கைக்கு சார்பில் அமைச்சர் மங்கள சமரவீர பேரவையில் உரையாற்றியதுடன் இலங்கை விவகாரத்தை முன்னிறுத்திய பல்வேறு உப குழுக்கூட்டங்களும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.