இந்தியா - சீனா மோதல் : தமிழக வீரர் உள்ளிட்ட 20 இந்திய இராணுவத்தினர் பலி 

17 Jun, 2020 | 07:57 AM
image

இந்தியா மற்றும் சீனாவின் எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இடம்பெற்ற மோதலில் இந்திய தரப்பில் 20 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்தி ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

அத்துடன் குறித்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் இந்திய இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில் சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியா-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு தரப்பு இராணுவத்தினருக்கும் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டது. 

இதில் இந்திய இராணுவம் தரப்பில் இராணுவ  அதிகாரியொருவர் உள்ளிட்ட 3 இந்திய இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டமாக செய்திகள் தெரியவந்தது.

இந்நிலையில் இந்திய தரப்பில் 20 பேர் பலியாகியிருப்பதாவும், எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய இராணுவ தகவல்கள் தெரிவித்தன.

அதேவேளையில் சீனா தரப்பில் 43 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52