ஊடகவியலாளர் தரிஷா பெஸ்டியனின் மடிக் கணிணி இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி அறிக்கை பெற உத்தரவு

Published By: Digital Desk 3

16 Jun, 2020 | 09:37 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

நீதிமன்ற தேடுதல் உத்தரவு அனுமதிக்கு அமைய, நாரஹேன்பிட்டி வீட்டிலிருந்து சி.ஐ.டி.யினரால் கைப்பற்றப்பட்ட  சண்டே ஒப்சவர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் பிரபல ஊடகவியலாளருமான தரிஷா பெஸ்டியனின் மடிக் கணினியை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெற கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டார்.

இதன்போது தரிஷா பெஸ்டியன் சார்பில் மன்றில் ஆஜரான  சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், குறித்த மடிக் கணிணி சி.ஐ.டி.யினர் தெரிவிக்கும் திகதியில் கைப்பற்றப்படவில்லை எனவும் அதற்கு முன்னர் ஜூன் 4 ஆம் திகதியே சி.ஐ.டி.யினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டதாகவும் அதனால் அதில் ஜூன் 4 முதல் 10 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் புதிதாக தகவல்கள் உட்படுத்தப்பட்டோ அல்லது மாற்றப்பட்டோ இருக்கின்றனவா எனவும் ஆராய வேண்டும் என  முன்வைத்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

அதன்படி, குறித்த மடிக் கணிணியை பகுப்பாய்வு செய்யும் போது,  கடந்த ஜூன் 4 ஆ திகதி முதல் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில்  மடிக்கணிணியில் புதிதாக தகவல்கள் உட்செலுத்தப்பட்டுள்ளனவா அல்லது மாற்றப்பட்டுள்ளனவா எனவும் ஆராயுமாறு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளருக்கு மேலதிக உத்தரவொன்றினையும் பிறப்பித்தார்.

கடத்தி தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்ட,  பொய்யான தகவல்களை வழங்கி தேசத்தை அசெளகரியபப்டுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்  வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சுவிற்ஸர்லாந்து தூதரகத்தின் வீசா பிரிவின் சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் விவகார வழக்கு விசாரணைகள் இன்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது  விசாரணையாளர்களான சி.ஐ.டி. சார்பில் பிரதான பொலிஸ் பரிசோதகர் கெலும் கருணாரத்ன, பொலிஸ் பரிசோதகர் இக்பால் ஆகியோருடன் சிரேஷ்ட அரச சட்டவாதி ஜனக பண்டார  மன்றில் ஆஜரானார்.

சந்தேக நபரான கானியா பெனிஸ்டர் பிரன்ஸிஸ் சார்பில்,  சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமரப்பெரும ஆஜரானார்.

இதன்போது மன்றுக்கு மேலதிக விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த சி.ஐ.டி. அதிகாரிகள், கடந்த  ஜூன் 9 ஆம் திகதி நீதிமன்றில் பெற்றுக்கொன்ட தேடுதல் அனுமதி உத்தர்வுக்கு அமைய ஜூன் 10 ஆம் திகதி தரிஷா பெஸ்டியனின் வீட்டில் சோதனை செயததாகவும் அங்கிருந்த மடிக் கணினி ஒன்று மட்டும் கிடைத்ததாகவும், அதனை  இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பவும் அனுமதி கோரினர். இதர்கு நீதிவான் லங்கா ஜயரத்ன அனுமதியளித்த போது, ஊடகவியலாளர் தரிஷா பெஸ்டியன் சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரனி சிராஸ் நூர்தீன் மடிக் கணிணி தொடர்பில் உள்ள சில சிக்கலான விடயங்களை மன்றுக்கு தெளிவுபடுத்தினார்.

' சி.ஐ.டி.யினர் ஜூன் 10 ஆம் திகதி மடிக் கணிணியை கைப்பற்றியதாக கூறுகின்றனர். எனினும் ஜூன் 4 ஆம் திகதியே அவர்கள் மடிக் கணிணியை எடுத்துச் சென்றதாகவும் மீள ஜூன் 10 ஆம் திகதி வந்து, தரிஷா பெஸ்டியனின் மாமனார் முன்னிலையில் அதனை சீல்  செய்து எடுத்துச் சென்றுள்ளதாகவும் எனது சேவை பெறுனர் கூறுகின்றார். இது பாரதூரமான ஒரு விடயமாகும்.

எனது சேவை பெறுனர் ஒரு ஊடகவியலாளர். அவரது கணினியில் பல்வேறு முக்கியமான  தகவல்கள் இருக்கும்.  அவருக்கு ஏதும் பாதிப்புக்கள் ஏற்படலாம்.  அத்துடன் ஜூன் 4 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதிவரை மடிக் கணிணி சி.ஐ.டி. பொறுப்பிலேயெ இருந்துள்ளதால் அக்காலப்பகுதியில் ஏதேனும் புதிதாக தகவல்கள் கணினியில் ஏற்றப்பட்டிருக்கலாம். அல்லது கணிணியில் உள்ள தகவல்கள் மாற்றப்பட்டிருக்கலாம்.  அவ்வாறு இடம்பெற்றுள்ளதா எனவும் இரசாயன பகுப்பாய்வு சோதனையில் தேடிப் பார்க்க உத்தரவிட வேண்டும்.' என வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த சி.ஐ.டி.யின் பிரதான பொலிஸ் பரிசோதகர் கெலும் கருணாரத்ன குறித்த குற்றச்சாட்டை மறுத்தார். அனுரங்கி சிங் ( சண்டே ஒப்சவர் பத்திரிகையின் செய்தி ஆசிரியர்) முதலில் விசாரித்த போதே மடிக் கணினி தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டதாக கூறினார்.

'  அந்த மடிக் கணிணியை தரிஷா பெஸ்டியனின் ஆலோசனைக்கு அமைய நாரஹேன்பிட்டி வீட்டில்  கொண்டு போய் வைத்ததாக அவர் கூறியதை அடுத்தே அதனைப் பெற்றுக்கொள்ள நாம் அங்கு சென்றோம்.

அப்போது தரிஷாவின் மாமனாரான உபாலி இந்ர குப்த மடிக் கணிணி குறித்து தெரியாது என்றார். பின்னர் மடிக் கணிணியைப் பெற அனுரங்கியின் உதவியை நாடிய போதும் அவர் ஒத்துழைக்க மறுத்துவிட்டார்.

பின்னர் நாம் மீள வீட்டுக்கு சென்ற போது, மாமனாரும் நீதிமன்ற உத்தரவை கோரியதையடுத்தே, 9 ஆம் திகதி  நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொண்டு மறுநாள் பகல் வேளையில் சோதனை செய்தோம்.

அப்போதே அதாவது ஜூன் 10 ஆம் திகதியே, தரிஷாவின் வீட்டின் அலுவலக அறையின் அலுமாரியில் இருந்து மடிக் கணிணியை மீட்டோம். வேறு எதனையும் எடுக்கவில்லை.  எமது தேடுதல் வேட்டை புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. தரிஷாவின் மாமனார் மற்றும் மாமியார் முன்னிலையிலேயே மடிக் கணிணியை சீல் வைத்து எடுத்து வந்தோம்.' என தெரிவித்தார்.

இதனையடுத்து  சந்தேக நபரான கானியா பெனிஸ்டர் சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, ' இந்த விவகாரம் தனது சேவை பெறுநரை இலக்கு வைத்த விசாரணையாக இருந்தது.

தற்போது அதற்கான சாட்சிகள் தேடபப்டுகின்றன. அதன்படியே ஒரு மடிக் கணிணி தேடுதல் வேட்டை ஊடாக கைப்பற்றப்பட்டுள்ளது. சி.ஐ.டி. மற்றும் தரிஷா பெஸ்டியன் தரப்புகள் சார்பில் முன்வைக்கப்படும்  விடயங்களை ஆராயும் போது பரஸ்பர வேறுபாடுகள் உள்ளன. எனவே முதலில் எப்போது மடிக் கணிணி கைப்பற்றப்பட்டது என்பதை உறுதி செய்ய இம்மன்றுக்கு பொறுப்புள்ளது.

எனவே  தரிஷா பெஸ்டியனின் மாமனாரை மன்றுக்கு அழைத்து அது தொடர்பில் கோருவது சிறந்தது.' என தெரிவித்தார்.

இதனையடுத்து,  சிரேஷ்ட அரச சட்டவாதி ஜனக பண்டார,  இந்த விவகாரத்தில் ஜூன் 4 ஆம் திகதிக்கும் 10 ஆம் திகதிக்கும் இடையில் கணிணியில் புதிதாக தரவுகள் ஏற்றப்பட்டனவா, தகவல்கள் மாற்றப்பட்டனவா என்பதை ஆராய்வதில் தனக்கு ஆட்சேபனை இல்லை எனவும் அது அனைவருக்கும் சிறந்ததாக இருக்கும் ' என்றார்

இந்நிலையிலேயே அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த நீதிவான்,  எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்ததுடன் அன்றைய தினம்  தரிஷா பெஸ்டியனின் மாமனார் உபாலி இந்ரகுப்தவை மன்றில் ஆஜராக அறிவித்தல் விடுத்தார்.

அத்துடன் மடிக் கணிணியை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பவும் உத்தரவிட்ட அவர்,  ஜூன் 4 முதல் 10 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் புதிதாக தகவல்கள் உட்படுத்தப்பட்டோ அல்லது மாற்றப்பட்டோ இருக்கின்றனவா  என விஷேடமாக ஆராயுமாரும் மேலதிக உத்தரவொன்றினையும் பிறப்பித்தார்.

அவ்வாறு  தகவல்கள் புதிதாக குறித்த காலப்பகுதியில் உட்படுத்தப்பட்டோ மாற்றப்பட்டோ இருப்பின், அது தரிஷா பெஸ்டியன் தரப்பினராலோ அல்லது சி.ஐ.டி. தரப்பினராலோ முன்னெடுக்கப்பட்டிருக்க முடியும் எனவும் அது தொடர்பில் அதன் பின்னர் விசாரணை ஒன்று முன்னெடுக்கப்படல் வேண்டும் எனவும் சுட்டிக்காட்டி நீதிவான் வழக்கை ஜூலை 21 வரை ஒத்தி வைத்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08