ஜப்பானில் பயணிகள் கப்பலில் தீ விபத்து

Published By: Digital Desk 3

16 Jun, 2020 | 09:31 PM
image

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள  துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட பயணிகள் கப்பலில் தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த தீயை கப்பலில் பணிபுரிந்தவர்கள், தீயணைப்பு மற்றும் கடற்படைவீரர்கள்  ஆகியோர் பல மணிநேரத்தின் பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை, தீ விபத்தில் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜப்பானின் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றான அசுகா II என்ற கப்பலின் மேல் தளத்தில் உள்ள ஒரு களஞ்சியசாலையில் தீப்பற்ற தொடங்கியதாக உள்ளூர் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

கப்பலில் அத்தியாவசிய பணிக்காக 153 பணியாளர்கள் இருந்துள்ளதோடு, அவர்களும் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கப்பல் டோக்கியோவின் மேற்கே உள்ள யொக்கஹாமா துறைமுகத்தில் சிங்கப்பூரிலிருந்து திரும்பிய பின்னர் ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து பராமரிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59