லா லிகா தொடரில் ரியல் மெட்ரிட் அணிக்கு இலகு வெற்றி

16 Jun, 2020 | 07:53 PM
image

லா லிகா கால்பந்தாட்ட போட்டித் தொடரின் அய்பார் அணிக்கெதிரான லீக் போட்டியில் ரியல் மெட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் இலகு வெற்றியை பதிவு செய்தது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்களின்றி நடத்தப்பட்ட இப்போட்டி ஸ்பெய்னின் மெட்ரிட் நகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்பம் முதலே ரியல் மெட்ரிட் அணி ஆதிக்கம் செலுத்தியிருந்தது. போட்டியின் 4 ஆவது நிமிடத்தில் ரியல் மெட்ரிட் அணி முதல் கோல் அடித்தது. அந்த அணியின் வீரர் கரிம் பென்ஸிமா பரிமாற்றிய பந்தை டோனி குரூஸ் கோலுக்குள் திணித்தார்.

30 ஆவது நிமிடத்தில் சக வீரர் ஈடன் ஹசார்ட் கோல் எல்லையை நோக்கி அடித்த பந்தை ரியல் மாட்ரிட் அணித்தலைவர் சேர்ஜியோ ரேமோஸ் இலாவகமாக கோலாக்கினார். அவ்வணியின் மெர்செல்லோ 37 ஆவது நிமிடத்தில் கோலடிக்க முதல் பாதியில் ரியல் மெட்ரிட் அணி  3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் பதில் கோலடிக்க அய்பார் அணி எடுத்த முயற்சிக்கு பலன் கிடைத்தது. 60 ஆவது நிமிடத்தில் அவ்வணியின் பெட்ரோ பிகாஸ் ஆறுதல் கோல் அடித்தார்.  அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் எதுவும் கிடைக்கவில்லை. முடிவில் ரியல் மெட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அய்பார் அணியை வீழ்த்தியது.

இப்போட்டியை அடுத்து, நடைபெற்ற மற்றொரு போட்டியில் ரியல் சோசிடேட் மற்றும் ஒசாசுனா அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டி  1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ரியல் மாட்ரிட் அணி இதுவரை 28  போட்டிகளில்  17 வெற்றி, 8 சமநிலை, 3 தோல்வியுடன் 59 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில்  இரண்வது இடத்தில் உள்ளது. நடப்பு சம்பியனான பார்ஸினா அணி 61 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05