ICBT யின் வாய்ப்புக்களின் webinars வலைத்தள முதலாவது தொடரின் வெற்றிகரமான நிறைவு

16 Jun, 2020 | 02:32 PM
image

Cardiff Metropolitan University-ICBT   பழைய மாணவர் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட புதிய யுகத்தின் அறைகூவல்கள், வாய்ப்புக்களின் webinars வலைத்தள முதலாவது தொடரின் வெற்றிகரமான நிறைவு!

Cardiff Metropolitan University-ICBT   பழைய மாணவர் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வு கடந்த மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற போது கம்பனிகள் புதிய வணிக மாதிரிகளை கடைப்பிடிக்க தேவையான தொழில்நுட்ப மாற்றல்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

தொழில்நுட்ப துறை, உளவியலும் தீர்மானம் எடுத்தலும், நிதித் துறை ஆகிய மூன்று முக்கிய துறைகளிலும் கவனத்தை செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள றநடிiயெச  வலைத்தள நிகழ்வு மென்பொருள் குழுக்கள் தொடர்பு மூலமாகவும் முகநூல் நேரடி விசை மூலமாகவும் 200க்கும் அதிகமான பங்காளர்களை கவர்ந்துள்ளது.

பங்காளர்கள் மிக்க சுவாரஸ்யத்துடன் பெருமளவு வினாக்களை கேட்டபோதும்   அறிவுரைக் குழுவினர் அவர்களுக்கு வழங்கப்பட்ட மட்டுப்பாடான நேரத்திற்குள் அவற்றில் பெரும்பாலானவற்றுக்கு பெருமுயற்சியுடன் பதிலளித்தார்கள். முகநூல்களில் வெளியிடப்பட்ட இந்நிகழ்வினை 48 மணிநேரத்திற்குள் மேலும் 2,500க்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

இலங்கை பத்திரிகை நிறுவக பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. குமார் லொபேஸ் மாலை 5 மணியிலிருந்து 6.30 வரை இடம்பெற்ற இந்நிகழ்வினை மிகத் திறமையுடன் மிதப்படுத்தி நிதானப்படுத்தினார். புகழ்பெற்ற கருத்துரையாளர்களில் ICBT நிறுவக உளவியல் திணைக்களத்தின் தலைவர் திருமதி பவானி பொரலஸ்ஸ, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் பணிப்பாளர் திரு. உதான விக்கிரமசிங்க, இலங்கை வங்கியின் பிரதி பொது முகாமையாளரும் பிரதம இடர் முகாமைத்துவ அதிகாரியுமான திரு. டி.என்.எல். பெர்னான்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

கொள்ளை நோயினால் ஏற்பட்டுள்ள பெருமளவிலான நெருக்கடிகள் குறித்து கருத்துரையாளர்களுடன் கலந்தாலோசித்த போது அவர்கள் பல நிபுணத்துவ தீர்வுகளை தெரிவித்து நாட்டிற்கு சில முன்னேற்றமான அறிவுரைகளை தெரிவித்தனர்.    

இலங்கையின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்கும் சிறிய, நடுத்தர தொழில் முயற்சி துறைகள் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அரசாங்க உதவி மற்றும் அவசர தேவைகளுக்காக பெற்றுக்கொண்ட கடன்களை மீள அறவிடுதலில் நிவாரணம் அளிப்பது ஊடாக தொழில் முயற்சிகள் மூடப்படுவதை தவிர்ப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. கம்பனிகள் புதிய வணிக மாதிரிகளை கடைப்பிடிக்க தேவையான தொழில்நுட்ப மாற்றல்கள்ட குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.      

எவ்வாறாயினும், சவால்களை சமாளிப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்ததுடன் அறிவுரையாளர்கள் இலங்கை போன்ற நாடுகளில் வணிக விருத்திக்கு கொண்டு வரக்கூடிய ஒழுங்குமுறைகள் குறித்தும் நிகழ்வில் ஆராயப்பட்டது.   

கொள்ளை நோயினால் சமூகம் அடக்கப்படுவது, வணிக இழப்புக்கள், நிதியுறுதிச் சமநிலை ஆகியவற்றின் விளைவாக தனிப்பட்ட பணியாளர்கள், குடும்பங்கள், தொழில் புரியும் பெண்கள், சிறுவர்கள் ஆகியோர் மீது ஏற்படக்கூடிய உளவியல் தாக்கங்கள் ஆகியன பற்றி நிகழ்ச்சியில் ஆராயப்பட்டமை அதிவிசேட அம்சமாகும். இத்தகைய நெருக்கடியான தருணத்தில் ஒரு சாதகமான மனப்போக்கை பேணுவது குறித்தும் மக்கஎளுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்தும்  விரிவாக கலந்துரையாடப்பட்டது.        

பழைய மாணவர் சங்க தலைவர் திரு, ஹரி மோர்சா நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்திதுடன் நிகழ்வு நிறைவின் போது பங்காளர்கபளுக்கும் கருத்துரையாளர்களுக்கும் நன்றி கூறினார். 

Webinars வலைத்தளம் ஊடான  தொடர்களில் இரண்டாவதன் ஏற்பாடுகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57