தொடரும் காணி அபகரிப்பு  

Published By: Priyatharshan

16 Jun, 2020 | 10:02 PM
image

வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி மக்களுக்குரிய காணிகளை வன வள திணைக்களம் அபகரித்து வருவதாக குறித்த பிரதேசவாசிகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். 

அண்மையில் கிளிநொச்சி, பூநகரி பகுதியில் மக்களுக்குரிய காணிகளை வன வள திணைக்களம் தமக்குரிய காணியென அடையாளப்படுத்தியதுடன் குறித்த மக்களை அப் பகுதிக்குள் செல்ல விடாது தடுத்தையடுத்து அங்கு பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது.

பூநகரி சிராஞ்சி மொட்டையன் குளம் காணியை வன வள திணைக்களம் தனக்கு உரியது எனக் கூறி கடந்த  சனிக்கிழமைக்கிழமை அடையாளப்படுத்தி உள்ளது.

இவ்வாறு வடக்கு, கிழக்குப் பிரதேசத்தில் வன வள திணைக்களம் பொதுமக்களின் காணிகளை அரச காணிகளாக அடையாளப்படுத்துவது தொடர்ந்து கொண்டே வருகிறது. 

நாட்டில் வேறு எந்தப் பகுதிகளிலும் இல்லாதவாறு தமிழர் பிரதேசங்களை அபகரிக்கும் முயற்சியாக குறித்த திணைக்களம் செய்யப்படுவதாக தமிழ் மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 

கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய யுத்த சூழல் காரணமாக வடக்கு கிழக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் படையினரால் கபளீகரம் செய்யப்பட்டது.

இதனால் மக்கள் வருடக்கணக்கில் தமது சொந்த காணிகளுக்குள் செல்ல முடியாது பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். யுத்தம் ஆரம்பித்து அது முடிவுக்கு வந்து சுமார் மூன்று தசாப்த காலம் குறித்த பகுதிக்குள் மக்கள் செல்ல முடியாத நிலைமை காணப்பட்டது.

 இதனால்  தமது பிள்ளைகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த காணியகளில் இறுதி வரை செல்ல முடியாத நிலையில், பல பெற்றோர் வயது மூப்பு காரணமாக மரணத்தை தழுவியமையும் குறிப்பிடதக்கதாகும். 

இறுதியாக யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் தொடர்ச்சியான போராட்டங்கள்  கோரிக்கைகளை அடுத்தே அவற்றின் ஒரு பகுதி பாதுகாப்பு தரப்பினரால் காணி உரிமையாளர்களிடம் அவை கையளிக்கப்பட்டுள்ளன.

இருந்தபோதிலும் மேலும் பல ஏக்கர் நிலம் பாதுகாப்பு தரப்பினர் வசமே இருந்து வருகிறது.  முன்னர் வடமாகாணத்தில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் பொது மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளிலேயே பாரிய இராணுவத் தளங்கள்  அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் வனவள திணைக்களமும் வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை சொந்தம் கொண்டாடும் நிலையில் அபகரிக்கமுயல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

மேலும் அபகரிக்கப்படும் இக் காணிகளில் பெரும்பான்மையின மக்களை சட்டவிரோதமான முறையில் குடியேற்றும் நோக்குடனேயே வனவளத் திணைக்களம் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது . 

எனவே இத்தகைய செயற்பாட்டின் மூலம் வெறுமனே குழப்ப நிலையை உருவாக்காது இருக்க வேண்டியது குறித்த திணைக்களத்தின் கடப்பாடாகும்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04