ஜப்பான் வழங்கவிருந்த கடன் திட்டம் இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணத்தை தெரிவிக்கிறார் சம்பிக

Published By: J.G.Stephan

15 Jun, 2020 | 07:23 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றின் பின்னர் நாட்டிலுள்ள பிரஜைகள் மாத்திரமின்றி அரசாங்கமும் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரம் தொடர்பில் ஏற்பட்ட அவநம்பிக்கையின் காரணமாக ஜப்பான் வழங்கவிருந்த கடன் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உருமயவின் தலைவர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.



ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் தொற்றுக்கு பின்னர் நாட்டில் அனைத்து பிரஜைகளும் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அனைவருக்கும் வருமானம் அற்றுப் போயுள்ளது. பெரும்பாலானவர்களுக்கு தொழில் அற்றுப்போயுள்ளது. தேவையான உணவு பொருட்களை வாங்குவதில் கூட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கு மத்தியில் நாட்டில் மருந்து தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. பணம் கொடுத்தேனும் மருந்துகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது.

அதே போன்று வங்கிகளிலும் லீசிங் கம்பனிகளிலும் பல்வேறு தேவைகளுக்காக கடன் பெற்றவர்கள் பெரும் பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். இவற்றினடிப்படையிலான மிக மோசமான சம்பவமாக சுனில் ஜயரத்னவின் மரணத்தை நாம் பார்க்கின்றோம். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்குவதில்லை. ஆனால் அரச அதிகாரிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. இதனால் அரசாங்கத்தின் வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதி அற்றுப் போயுள்ளது.

தனிநபர்கள் இவ்வாறு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது ஒரு புறமிருக்க நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்தியா சென்றிருந்த போது கடனை மீள செலுத்துவதற்கு மூன்று வருட கால அவகாசம் கோரியிருந்தார். நாட்டுக்கு கடனை மீள செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் சுமார் 70 வருடங்கள் இலங்கைக்கு பெருமளவிலான  உதவிகளைச் செய்துள்ள ஜப்பான் இம்முறை வழங்கவிருந்த கடனை இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.

கடந்த மே மாதம் 7 ஆம் திகதி இது தொடர்பில் உத்தியோகபூர்வ கடிதமும் பிரமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த அரசாங்கத்தின் பொது நிதி பற்றி தமக்கு நம்பிக்கை இல்லை என்பதை ஜப்பான் இராஜதந்திய மொழியில் கூறியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்