அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்கள்,திருநங்கைகளுக்கு இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் பணியாற்ற விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, வோஷிங்டன் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஆஷ்டன் கார்ட்டர், ‘தங்களது பாலியல் அடையாளத்தின்படி இராணுவத்தில் பணியாற்றும்  திருநங்கைகள் ஒதுக்கப்படும் நிலைமைக்கு இனி முடிவு கட்டப்படும். 

திருநங்கைகள் எப்படி நடத்தப்பட வேண்டும்? என்ற வழிகாட்டி நெறிமுறைகள் கொண்ட புத்தகம் இன்னும் 90 நாட்களுக்குள் இராணுவ தளபதிகளுக்கும், இராணுவ வைத்தியர்களுக்கும் அளிக்கப்படுமென தெரிவித்தார்.