இறுதி முடிவை அவுஸ்திரேலியா எடுக்கும் -  சச்சின்

15 Jun, 2020 | 05:20 PM
image

உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை நடத்துவது குறித்து தங்கள் நாட்டு நிலைமைகளை ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தான் முடிவு செய்ய வேண்டும் என இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர்  தெரிவித்துள்ளார்.

7 ஆவது உலக இருபதுக்கு 20 போட்டித் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 18 அம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் அவுஸ்திரேலியாவில் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக இந்த போட்டி அங்கு நடப்பதில் தொடர்ந்து சந்தேகம் நிலவி வருகிறது. இதன் இறுதித் தீர்மானம் அடுத்த மாதத்துக்கு எடுக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) முடிவு செய்துள்ளது.

இது குறித்து சச்சின் டெண்டுல்கர் தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவிக்கையில்,

“உலக இருபதுக்கு 20 கிரிக்கெட்  தொடரின் தலைவிதி குறித்து என்னிடம் கேட்டால், அது அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் முடிவை பொறுத்தது. திட்டமிட்டபடி போட்டியை நடத்த முடியுமா? இல்லையா? என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

அதே சமயம் நிதி நிலைமை உள்ளிட்ட இன்னும் பல முக்கிய அம்சங்களையும் இந்த விவகாரத்தில் பரிசீலிக்க வேண்டியது அவசியமாகும். எனவே, இதில் முடிவு எடுப்பது கடினமானது தான். ஆனால் கிரிக்கெட் நடக்க வேண்டும். அதை விட பெரிது எதுவும் இல்லை”.’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “ரசிகர்களின்றி போட்டியை நடத்துவது நன்றாக இருக்காது. மைதான அரங்கினுள் ரசிகர்கள் இல்லாமல் உற்சாகமான சூழலை உருவாக்குவது கடினம். அரங்கில் ரசிகர்களை பார்க்கும் போதெல்லாமல் அதுவே சில நேரம் உங்களுக்குள் உத்வேகத்தை கொண்டு வரும். 25 சதவீதம் அளவுக்கு ரசிகர்களை அனுமதிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இங்கிலாந்து- மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே அடுத்த மாதம் 8 ஆம் திகதி முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்ப்பிக்கப்பட உள்ளமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் படிப்படியாக ஏனைய நாடுகளும் கிரிக்கெட் விளையாட ஆரம்பிக்கும்”’ என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05