சீனாவில் அவுஸ்திரேலியருக்கு மரண தண்டனை : வேதனையளிப்பதாக அவுஸ்ரேலியா தெரிவிப்பு

Published By: Digital Desk 3

15 Jun, 2020 | 09:41 PM
image

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு  சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அவுஸ்ரேலிய அரசாங்கம் உறுதி செய்துள்ளது.

கார்ம் அல்லது கேம் கிலெஸ்பி என்ற அந்த நபர் 7.5 கிலோ போதைப்பொருள் கடத்தியதாக கடந்த 2013 ஆம் அண்டு சீன விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அந்நபருக்குதான் தற்போது மரண தண்டனை  விதிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை என்ற தீர்ப்பு வேதனையளிப்பதாக அவுஸ்ரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

"எல்லா மக்களுக்கும் எல்லா சூழ்நிலைகளிலும் மரண தண்டனை விதிப்பதை அவுஸ்திரேலியா எதிர்க்கிறது. மரண தண்டனையை உலகளாவிய ரீதியில் ஒழிப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம்.

மேலும் எங்களுக்குக் கிடைக்கும் அனைத்து வழிகளிலும் இந்த இலக்கை அடைய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என அந்நாட்டு வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை சீனாவிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான பதட்டங்களை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து முறையான விசாரணைக்கு பிரதமர் ஸ்கொட் மோரிசன் பகிரங்கமாக அழைப்பு விடுத்ததிலிருந்து இருதரப்புக்குமிடையே சர்ச்சை நிலவுகிறது.

சீனாவிற்கு போதைப்பொருள்  கடத்தியதாக இதற்கு முன்பும் அவுஸ்திரேலியர் ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08