உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த அரசாங்கம் உடனடியான முனைப்புகளை மேற்கொள்ளும். அந்த வகையில் இவ்வருடத்தின் இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் குறித்த தேர்தலை மேற்கொள்ள உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்தார்.

மேலும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த ஜனாதிபதியும் பிரதமரும் விரைவான தீர்மானங்களை மேற்கொள்வார்கள் எனவே குறித்த விடயத்தை பூதாகரமாக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

புற கோட்டையிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளார் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.