''கௌரவ கலா­நிதி பட்டம் பெற்றோர் 'கலா­நிதி' என பயன்­ப­டுத்­து­வதை தவிர்க்­கவும்''

19 Nov, 2015 | 11:04 AM
image

கௌரவ கலா­நிதிப் பட்டம் பெற்­ற­வர்கள் தங்­க­ளது பெயர்­க­ளுக்கு முன்னால் ‘கௌர­வ’ என்ற சொற்­ப­த­மின்றி கலா­நிதி எனப் பயன்­ப­டுத்­து­வதை தடை­செய்ய வேண்­டு­மென புத்­தி­ஜீ­விகள் கோரிக்கை விடுக்­கின்­றனர்.

இது குறித்து புத்­தி­ஜீ­விகள் குறிப்­பி­டு­வ­தா­வது,


நாட்டில் போலி டாக்­டர்கள் போன்று போலிக் கலா­நி­தி­களின் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்­துள்­ளது. அரச அல்­லது தனியார் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்குச் சென்று இள­மாணி, முது­மாணி கற்­கை­நெ­றி­களைப் பூர்த்தி செய்து பட்­டங்­களைப் பெற்ற பின் சொற்ப எண்­ணிக்­கை­யி­லானோர் பல்­வேறு சவால்­க­ளுக்கு முகம்­கொ­டுத்து தங்­க­ளது துறைசார் துறை­களில் கலா­நிதி கற்கை நெறியைப் பூர்த்தி செய்து கலா­நிதிப் பட்­டங்­களைப் பெறு­கின்­றனர். 


இவ்­வாறு கலா­நிதி கற்­கையைப் பூர்த்தி செய்து பட்­டங்­களைப் பெறு­கின்­ற­வர்கள்; தங்­க­ளது பெயர்­க­ளுக்கு முன்னால் கலா­நிதி எனப் பயன்­ப­டுத்தி வரு­கையில், அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அல்­லது அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத நிறு­வ­னங்­க­ளினால் கௌர­வத்­திற்­காக வழங்­கப்­ப­டு­கின்ற கௌரவ கலா­நிதிப் பட்­டத்தை, துறைசார் கலா­நி­திகள் தங்­க­ளது பெயர்­க­ளுக்கு முன்னால் கலா­நிதி எனப் பயன்­ப­டுத்­து­வது போன்று, கௌரவ கலா­நிதிப் பட்டம் பெற்­ற­வர்­களும் கலா­நிதி எனப் பயன்­ப­டுத்­து­வது உண்­மை­யான கலா­நிதிப் பட்­டம் பெற்­ற­வர்­களின் தியா­கத்­தையும் முயற்­சி­யையும் சாத­னை­க­ளையும் கொச்­சைப்­ப­டுத்­து­வ­தா­கவே அமையும்.


அத்­துடன், கௌரவ கலா­நி­திகள் தங்­க­ளது பெயர்­க­ளுக்கு முன்னால் கௌரவம் என்ற பதத்தைத் தவிர்த்து கலா­நிதி எனப் பயன்­ப­டுத்­து­வது ஒரு­வ­கையில் சாதா­ரண பொது­மக்­களை ஏமாற்றும் செய­லா­கவே கரு­த­வேண்­டி­யுள்­ளது. இத்­த­கைய நிலை­மை­களைக் கருத்­திற்­கொண்டு, கௌரவ கலா­நிதிச் சான்­றி­தழ்­களைப் பெற்றுக் கொண்­ட­வர்கள் அவர்­க­ளது பெயர்­க­ளுக்கு முன்னால் கௌரவ கலா­நிதி என்று பயன்­ப­டுத்­து­வதை உறுதி செய்­யவும் அவ்­வாறு பயன்­ப­டுத்­தா­த­வர்கள் தொடர்பில் உரிய நட­வ­டிக்கை எடுக்­கவும் உயர்­கல்வி அமைச்சும் பொது ­நிர்­வாக உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சும் முன்­வர வேண்டும்.

 


அவ்­வா­றான நட­வ­டிக்கை பல்­வேறு சாவல்­க­ளுக்கு முகம்­கொ­டுத்து கால நேரங்­களை விரயம் செய்து உரிய கல்வி நிறு­வ­னங்­களில் கலா­நிதிப் பட்டம் பெற்­ற­வர்­களைக் கௌரப்­ப­டுத்­து­வ­தாக அமை­யு­மெ­னவும் குறிப்பிடுகின்ற புத்திஜீவிகள், இவ்விடயத்தில் ஊடகவியலாளர்கள் பொறுப்புடன் செயற்படுவதுடன் உண்மை நிலையைக் கருத்திற்கொண்டு, கலாநிதிப் பட்டம் எத்தகையது என்பதை உறுதி செய்து அவற்றை செய்திகளின்போது வெளிப்ப டுத்துமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50