ஜனாதிபதி செயலணிகளின் பிரதிபலிப்பு குறித்து சிவில் சமூக அமைப்புக்கள் விடுத்துள்ள அறிக்கை

Published By: Digital Desk 3

15 Jun, 2020 | 01:28 PM
image

(எம்.மனோசித்ரா)

கிழக்கு மாகாணத்தில் பரவலாக வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரை புறக்கணித்து பெருமளவில் பௌத்த மதகுருக்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிகள் இந்த சமூகங்களின் நலன்களை கருத்தில் கொள்ளாது செயற்படும் சாத்தியப்பாடுகளே காணப்படுகின்றன. 

அத்துடன் இச்செயலணிகள் அரசாங்கம் முன்னெடுக்கும் பெரும்பான்மை போக்கையே பிரதிபலிக்கின்றன என்று குறிப்பிட்டு 15 சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் 59 சமூக ஆர்வலர்களால் கையெழுத்திடப்பட்டு அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை சட்டத்தரணிகள் , பேராசிரியர்கள் உள்ளிட்ட தனிநபர்கள் 59 பேரும் , இலங்கையில் நல்லாட்சிக்கான அவுஸ்திரேலிய சட்டத்தரணிகள் சங்கம் , மனித உரிமைகள் மேம்பாட்டு மையம் , சட்டம் மற்றும் சமூக அறக்கட்டளை உள்ளிட்ட 15 சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் கையெழுத்திட்டுள்ள சிவில் சமூகத்தை சார்ந்த நாம், கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் ஜனாதிபதி செயலணிகள் தொடர்பில் அவதானித்து வருகின்றோம்.

கொவிட்-19 சூழலுக்கு முகங்கொடுக்கும் வகையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மூன்று ஜனாதிபதி செயலணிகளை நியமித்துள்ளார்.  

இவற்றில் ஒரு செயலணிக்கு ஒட்டு மொத்த சமூக வாழ்விற்கு நிலையான சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதற்கான முன்னெடுப்பு, ஒருங்கிணைப்பு, மற்றும் கண்காணிப்புகளை மேற்கொள்ள பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உருவாக்கப்பட்டு இயங்கிவரும் தொல்பொருள் திணைக்களத்தை புறக்கணித்து, இச்செயலணிகள் பரந்த மற்றும் தெளிவற்ற ஆணைகளை கொண்டுள்ளதோடு பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறாத நிலையில் அவற்றின் செயற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் பிரயோகிக்கப்படுவதை மேற்பார்வை செய்ய முடியாத ஓர் காலகட்டத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னொருபோதும் நிகழாத விதத்தில் சுகாதார, பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் காணப்படும் ஒரு கட்டத்தில் தொல்பொருள் மற்றும் மரபுரீதியிலான விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குவது உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய ஓர் விடயமாகும்.

இச்செயலணிகளின் உறுப்பினர்களில் மிக பெரும்பாலானவர்கள் சிங்கள சமூகத்தை சார்ந்தவர்களாவர். கிழக்கு மாகாணத்தில் பரவலாக வாழும் தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகத்தினரை புறக்கணித்துவிட்டு அதிகளவிலான பௌத்த மதகுருக்களை இம்மாகாணத்திற்கான செயலணி கொண்டுள்ளது. 

இச்செயலணிகள் மேற்குறிப்பிட்ட சமூகங்களின் நலன்களை கருத்தில் கொள்ளாது செயற்படும் சாத்தியப்பாடுகளே காணப்படுகின்றது. அத்துடன் அரசாங்கம் முன்னெடுக்கும் பெரும்பான்மை போக்கையே இவை பிரதிபலிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11