நடகர் சுஷாந்த் சிங் தற்கொலை : மிகுந்த அதிர்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

14 Jun, 2020 | 10:54 PM
image

பிரபல பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இன்றையதினம் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரபல பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். 

34 வயதுடைய சுஷாந்த் சிங் ராஜ்புட் , பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அண்ட்டோல்ட் ஸ்டோரி' (MS Dhoni: The Untold Story) திரைப்படம் இவரை மொழிகள் தாண்டி பிரபலமாக்கியது.

இந்தப் படத்துக்காக தோனியுடனே பயணித்து அவரது உடல் அசைவுகள், பேட்டிங் முறை, விக்கெட் கீப்பிங் முறை என கற்றுக் கொண்டு 'எம்.எஸ்.தோனி' படத்தில் நடித்திருந்தார். 

இந்தப் படத்துக்கான பயிற்சியில் இந்திய அணியினர் அனைவருடனும் பழகும் வாய்ப்பை சுஷாந்த் சிங் பெற்றார். ஆகையால், இந்திய அணியினர் பலரும் அவரை நண்பராகவே பார்த்தனர்.

இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் மறைவு இந்திய அணியினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் அவருடைய மறைவுக்கு இந்திய அணியினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

“சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்திருக்கிறேன். அவ்வளவு இளமையான, திறமையான நடிகர். அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆன்மா சாந்தியடையட்டும்” என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

“வாழ்க்கை மென்மையானது. ஒருவர் என்னவெல்லாம் அனுபவித்து வருகிறார் என்பது நமக்குத் தெரியாது. எல்லோரிடமும் கனிவாக இருங்கள். சுஷாந்த் சிங் ராஜ்புத். ஓம் சாந்தி” என சேவாக் இரங்கல் வெளியிட்டுள்ளார்.

“ சுஷாந்த் சிங் ராஜ்புத் பற்றிக் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் இருக்கிறேன். இதை ஏற்க மிகக் கடினமாக இருக்கிறது. அவர் ஆன்மா சாந்தியடையட்டும். கடவுள் அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் இந்த இழப்பைத் தாங்கும் வலிமையைத் தரட்டும்” என விராட் கோலி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“இது கவலையைத் தருகிறது. இது நடந்திருக்கிறது என்பதை ஏற்க முடியவில்லை. அற்புதமான நடிகர், ஆன்மா சாந்தியடையட்டும் என் சகோதரா” என ரோஹித் சர்மா இரங்கல் வெளியிட்டுள்ளார்.

“உண்மையிலேயே அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. அவர் ஆன்மா சாந்தியடையட்டும். சுஷாந்த் சிங் ராஜ்புத்” ரஹானே இரங்கல் தெரிவித்துள்ளார்.

“சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் பற்றி செய்தி கேள்விப்பட்டு முற்றிலும் அதிர்ச்சியும், திகைப்பும் அடைந்தேன். ஒருவர் என்ன நிலையில் இருக்கிறார் என்பதை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடிவதில்லை” என மொஹமட்கைப் குறிப்பிட்டுள்ளார்.

“சுஷாந்த் சிங் ராஜ்புத் பற்றிக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். மஹியின் பயோபிக் திரைப்படத்துக்காக எங்களுடன் நேரம் செலவிட்டார். அப்போது அவரை சில முறை சந்தித்திருக்கிறேன். நாம் ஒரு அழகான, என்றும் புன்னகையுடன் இருக்கும் நடிகரை இழந்துவிட்டோம். ஓம் சாந்தி” என ரோஹித் சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

“இந்தச் செய்தி பொய் என்று சொல்லுங்கள். சுஷாந்த் சிங் ராஜ்புத் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. அவரது குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள். துயரமான விஷயம்” என ஹர்பஜன் சிங் இரங்கள் தெரிவித்துள்ளார்.

“மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளேன். இதை நம்ப முடியவில்லை. அவரது குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள் மற்றும் பிரார்த்தனைகள். ஆன்மா சாந்தியடையட்டும். அவர் ஆன்மாவை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என ஷிகர் தவான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35