அமெரிக்காவின் 240வது சுதந்திரதினத்துக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் A&E லங்கா

Published By: Priyatharshan

01 Jul, 2016 | 03:51 PM
image

A&E லங்கா உலகின் முன்னணி தையல் நூல்கள் உற்பத்தியாளராக திகழ்வதுடன், 240 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் அமெரிக்காவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. 

இதேவேளை, நிறுவனத்தின் தாய் நிறுவனமான American & Efird (A&E) தனது 125 வருட பூர்த்தியையும் கொண்டாடுகிறது.

நாட்டின் பெறுமதியான, தரமான மற்றும் புத்தாக்கமான கலாசாரத்துக்கு உரித்தான A&E லங்கா, அமெரிக்க நிறுவனம் எனும் வகையில் 25 வருட பூர்த்தியை கொண்டாடுகிறது. துறையில் உயர் பாதுகாப்பு நியமங்களைக் கொண்ட துறைசார்ந்த முன்னோடியாக இந்நிறுவனம் பார்க்கப்படுவதுடன், சர்வதேச ரீதியில் பின்பற்றப்படும் A&E ஒழுக்க நியதிகளையும் பின்பற்றி வருகிறது. 

வெவ்வேறு செயற்பாடுகளில் தனது ஒழுக்க விதிமுறைகளை A&E லங்கா உறுதி செய்வதுடன் WRAP நிலையையும் எய்தியுள்ளது. இது உலகின் மாபெரும் சுயாதீனமான சானறளிக்கும் முறையாக அமைந்துள்ளதுடன், ஆடைகள், பாதணிகள் மற்றும் தையல் பொருட்களை இலக்காகக் கொண்டமைந்துள்ளன.

A&E இன் பெருமைக்குரிய வரலாறு 1891 இலிருந்து ஆரம்பமாகியது. அமெரிக்க யார்ன் அன்ட் புரொசசிங் கம்பனி எனும் நாமத்துடன் செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தது. 1947 ஆம் ஆண்டில், நிறுவனம் Efird மெனுபக்சரிங் கம்பனியின் உரிமையாண்மையையும் கொள்வனவு செய்திருந்தது. இந்த நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டதன் பின்னர், இரு நிறுவனங்களின் பெயர்களும் ஒன்றிணைக்கப்பட்டு 1952 ஆம் ஆண்டு முதல் American & Efird® மில்ஸ் Inc என அழைக்கப்பட்டது. 1968 ஆம் ஆண்டு,  ஆர்.எஸ்.டிக்சனின் பன்முகப்படுத்தப்பட்ட ஈடுபாட்டின் காரணமாக, ருட்டிக் கோர்பரேஷன் ஸ்தாபிக்கப்பட்டது. இந்நிறுவனம் A&E இன் தாய் நிறுவனமாக திகழ்ந்தது. 

இவரின் ஈடுபாட்டுடன் A&E தொடர்ச்சியாக வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், உலகளாவிய ரீதியிலும், நாடளாவிய ரீதியிலும் விரிவடைந்தது. 1890 இல் முதல் தடவையாக ஸ்தாபிக்கப்பட்டது முதல்,  A&E தனது செயற்பாடுகளை சர்வதேச ரீதியில் படிப்படியாக விஸ்தரித்திருந்தது. இதன் மூலம் தொழில்நுட்ப மேம்படுத்தல்களையும் முன்னெடுத்திருந்தது. KPS கெப்பிட்டல் பார்ட்னர்ஸ் இருப்புக்கமைய எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கு தயாரான நிலையில் A&E காணப்படுவதுடன், தொழிற்துறையின் தையல் நூல்கள், தொழில்நுட்ப ஆடைத் தையல்கள் மற்றும் எம்ப்ரோய்டரி நூல் சந்தைகளுக்கு தனது விநியோகங்களை மேற்கொண்டு வருகிறது.

American & Efird ஐக்கிய அமெரிக்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி லெஸ் மில்லர் கருத்து தெரிவிக்கையில், 

“125 ஆண்டுகள் தொடர்ச்சியாக வியாபார செயற்பாடுகளை முன்னெடுப்பது என்பது A&E க்கும், எமது வாடிக்கையாளர்களுக்கும் மற்றும் நாம் இயங்கும் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் விசேடமானது. இந்த நீடித்த செயற்பாடு என்பது எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பான, கடுமையான உழைப்பு மற்றும் தன்னார்வ அடிப்படையிலான ஒன்றிணைவுகள் போன்றவற்றில் தங்கியுள்ளன” என்றார்.

“மேலும், எமக்கு உண்மையான மற்றும் நீண்ட காலமாக காணப்படும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எமது தயாரிப்புகளை பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் எமக்கு உதவிகளை வழங்கியுள்ளனர். எமக்கு முன்னர் இங்கு பணியாற்றியவர்கள் வெற்றிகரமாக இந்நிறுவனத்தை வழிநடத்தியமை காரணமாக இன்று நாம் இங்குள்ளோம். 

கடந்து வந்த காலத்தை நாம் கொண்டாடும் வேளை, எதிர்காலம் நிறுவனத்துக்கு பிரகாசமானதாக அமைந்துள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

A&E லங்கா என்பது,  A&E இன் முழுமையான அங்கீகாரத்தைப் பெற்ற அங்கத்துவ நிறுவனமாகும். இது சர்வதேச ரீதியில் முன்னணி ஆடை நூல் வகைகளை விநியோகிக்கும் நிறுவனமாகும். A&E லங்கா தற்போது சகல முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்குவதுடன், இலங்கையின் நூல்கள் விற்பனை சந்தையில் முன்னணியில் திகழ்வதுடன், உலகின் பல நாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதிகளையும் மேற்கொண்ட வண்ணமுள்ளது.

A&E லங்கா மூலமாக சர்வதேச A&E சூழல் பாதுகாப்பான செயற்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. “நிலைபேறின் பத்து நூல்கள்” எனும் தொனிப்பொருளில் இவை இயங்குகின்றன. A&E என்பது இந்த நிகழ்ச்சியை கலாசாரம், புத்தாக்கம், உருவாக்கம் மற்றும் விநியோகம் ஆகியவற்றை நிலைபேறான செயற்பாடுகளில் முன்னெடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது. 

இதற்காக பல விருதுகளையும் கௌரவிப்புகளையும் நிறுவனம் பெற்றுள்ளது. அண்மையில் பெற்றுக் கொண்ட விருதுகளில், ACCA நிலைபேறான அறிக்கையில் விருதுகள் வழங்கலில் பொதுச் சேவைகள் மற்றும் மூலப்பொருட்கள் பிரிவில் வெற்றியாளராக தெரிவாகியிருந்தது.

A&E நிறுவனம் உலகளாவிய ரீதியில் தொழிற்துறைசார்ந்த தையல் நூல்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இவை வெவ்வேறு வகையான ஆடைகள் மற்றும் ஆடைகள் தவிர்ந்த தையல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதில் casualwear, sportswear, lingerie, sleepwear, children’s wear, infant wear, embroidery, footwear, tea bags, toys, sails, protective clothes, protective cables போன்றன அடங்கியுள்ளன. 

தனது சர்வதேச வலையமைப்பினூடாக இத்தயாரிப்புக்கள் 23 நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு 50 நாடுகளில் விநியோகிக்கப்படுவதுடன் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிறுவனத்தில் நேரடியாக மற்றும் இணை நிறுவனங்களின் பங்காண்மையின் ஊடாக 10000 க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58