பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் விதமாகவே ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது - சந்ரசேன

14 Jun, 2020 | 08:05 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கிழக்கு  மாகாணத்தில்  தொல்பொருள் மரபுரிமைகள் தொடர்பில் ஆராயும்  ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம்  சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் நியமிக்கப்படவில்லை. என்ற காரணத்தை சுட்டிக்காட்டி எதிர்த் தரப்பினர்  தமிழ் மக்கள் மத்தியில் தவறான சித்தரிப்புக்களை முன்னெடுக்கிறார்கள்.

காலம் காலமாக  உள்ள பிரச்சினைகளுக்கு  தீர்வு காணும் விதமாகவே செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.    செயலணியின் செயற்பாடுகள் எத்தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாது என சுற்றாடல்,  காணி விவகாரம் மற்றும்   வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் எஸ். எம்.  சந்ரசேன தெரிவித்தார்.

அவர்  மேலும் குறிப்பிடுகையில்

தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு பாரம்பரிய மரபுரிமைகள் அழிக்கப்படுவதாக  குற்றஞ்சாட்டப்படுகிறது. 

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இப்பிரச்சினை தீவிரமடைந்துள்ளதாக அவதானிக்கப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்  தலைமையிலும், தொல்பொருள்  பௌத்த மத முக்கிய தரப்பினரையும் உள்ளடக்கி  தொல்பொருள் தொடர்பில் ஆராயும்  விசேட  ஜனாதிபதி செயலணியை ஸ்தாபித்தார்.

நியமிக்கப்பட்ட   ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் சமூகத்தினரை  பிரதிநிதித்தவப்படுத்தப்படவில்லை. என்ற    காரணியை அடிப்படையாகக் கொண்டு  எதிர் தரப்பினர் அரசாங்கம் இராணுவ ஆட்சினை மயப்படுத்துவதாகவும், தமிழ், முஸ்லிம்  மக்களின்  உரிமைகள் அதிகார பூர்வமாக ஆக்கிரமிக்கப்படுவதாகவும்  தவறான அரசியல் பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள்.

அரசியல் நோக்கங்களை  இலக்காகக் கொண்டு   செயலணியில் செயற்பாடுகள் வகுக்கப்பட்வில்லை.காலம் காலமாக புரையோடி போயுள்ள இந்த பிரச்சினைக்க தீர்வு காணப்பட வேண்டும். செயலணியின்  செயற்பாடுகள்  எந்த சமூகத்தின்  உரிமைகளுக்கும்  பாதிப்பை  ஏற்படுத்தாது.  காணி விவகாரம்  எனது அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளது.

அரச  காணிகள் பல தனியார்மயப்படுத்தப்பட்டுள்ளன.  அரசாங்கத்துக்கு சொந்தமான  காணியில்  அனுமதியற்ற விதத்தில் குடியமர்ந்துள்ள  மக்களை  அதிகாரத்தை  பயன்படுத்தி வெளியேற்ற முடியாது.  முதலில் அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அதன் பின்னரே   அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

ஆகவே ஜனாதிபதி செயலணியில்  நடவடிக்கைகள் அனைத்து தரப்பிலும் செல்வாக்கு செலுத்தும் .   தொல்பொருள் தொடர்பில் ஆய்வு செய்வது மாத்திரமே செயலணியின் பொறுப்பு.   சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு  எத்திரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானங்கள் எடுக்கப்படும்.  என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04