நீண்டதூர பயணிகள் பஸ் சேவை குறித்து பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவிப்பு!

14 Jun, 2020 | 05:12 PM
image

(செ.தேன்மொழி)

கொழும்பு நகருக்கு வெளியில் பயணிக்கும் நீண்டதூர பயணிகள் பஸ்கள் உரிய நேரத்திற்கு பயணத்தை ஆரம்பிக்காவிட்டால் முதல் தடவை அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதுடன், இரண்டாவது முறையும் குற்றம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கொழும்பு நகருக்கு வெளியில் பயணிக்கும் பயணிகள் போக்குவரத்து பஸ்கள் வரையறுக்கப்பட்ட காலத்திற்கு முன்னரும், காலதாமதமாகவும் செல்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

இதன்போது குறித்த பஸ்கள் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் வரையறுக்கப்பட்டுள்ள காலத்தினையும் விட முன்னரும் அல்லது காலதாமதமாகவும் செல்வதாக தெரியவந்துள்ளன.

இதனால் குறித்த காலத்திற்கு முன்னர் பயணிக்கும் பஸ்கள் நியமித்த காலத்திற்கு முன்னர் செல்வதற்காக அதிக வேகத்தில் செல்லவேண்டி ஏற்படுவதாகவும் , இதனால் அந்த பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுவதுடன் , சொத்துகள் பறிபோவதற்கான வாய்ப்பும் ஏற்படுகின்றது. இதேவேளை காலதாமதமாக செல்லும் பஸ்களின் பயணிகளுக்கு தேவையற்ற முறையில் காலதாமதம் ஏற்படுவதாகவும் தகவல்கிடைக்கப் பெற்றுள்ளது.

இவ்வாறு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு புறம்பாக பயணிக்கும் பஸ்கள் தொடர்பில் கொழும்பு அவசரசேவைப் பிரிவைத் தொடர்புக் கொண்டு , குறித்த பஸ்களுக்கான உரிய காலத்தை அறிந்துக் கொள்ப்படும் . பின்னர் முதல் தடவையாக குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆலோசனை வழங்குவதுடன் , இரண்டாவது தடவையாகவும் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில்  அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21