(தி.சோபிதன்)
யாழ்ப்பாணத்தில் பொதுத் தேர்தலுக்கான பரீட்ச்சார்த்த தேர்தல் இன்று நடைபெற்றது.
யாழ்ப்பாணம் நாவாந்துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் வாக்களிப்பு நடைபெற்றது.
நாவாந்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த வாக்காளர்கள் பரீட்ச்சார்த்த தேர்தலில் வாக்களித்தனர்.
இந்த வாக்களிப்பு இன்று காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை நடைபெற்றது.
வாக்காளர்களுக்கன அறிவுறுத்தல்கள் ஏற்கனவே கிராம அலுவலர்கள் ஊடாக வளக்கப்பட்டிருந்தன.
குறித்த வாக்களிப்புக்கு வருகை தந்த வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வந்ததுடன் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமும் கொண்டு வந்தனர் .அத்துடன் வாக்களிக்க வருபவர்கள் கறுப்பு அல்லது நீல நிற பேனா கொண்டு வந்தனர்.
மேலும் வாக்களிப்பு நிலையம் நேற்று (13)சுகாதார அதிகாரிகளினால் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.
அத்துடன் வாக்களிப்பின் போது அனைத்து சந்தர்ப்பங்களிலும் சமூக இடைவெளிகளை பின்பற்றுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. வாக்காளர்களின் உடல் வெப்பநிலை முதலில் சோதிக்கப்படும். வாக்காளர்கள் அதன் பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடு இடம்பெறும்.
அதனையடுத்து திரவம் ஊடாக கைகளை தொற்று நீக்கம் செய்யப்பட்டு அதன் பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டு தேர்தல் கடமையில் உள்ள அதிகாரிகளின் கைகள் படாதவாறு மை பூசப்பட்டது. அதன் பின்னர் வாக்குச் சீட்டு கொடுக்கப்படும்.
வாக்காளர்கள் புள்ளியிடுவதற்கான கூண்டில் வைத்து அதில் அடையாளம் இட்ட பின்னர் வாக்குப் பெட்டியில் போட்டுவிட்டு பிறிதொரு வாயில் ஊடாக வெளியேறி மீண்டும் கைகளை கழுவி வீடு சென்றனர்.
இந்த பரீட்சார்த்த தேர்தல் நடவடிக்கையில் யாழ்ப்பாண மாவட்ட செயலர், தேர்தல் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM