கொண்டாக்ட் லென்ஸ் அணிவதை  தவிர்ப்பதால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உதவும் 

13 Jun, 2020 | 04:11 PM
image

கொரானா வைரஸ் தொற்று பரவி வரும் இந்த தருணத்தில் கண்களில் காண்டாக்ட் லென்ஸ்அணிந்து கொள்வதை முற்றாக தவிர்க்க வேண்டுமென்று கண் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு முக கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது... போன்ற சில வழிமுறைகளை மக்கள் தற்போது கடைப்பிடித்து வருகிறார்கள்.

வெளியில் செல்லும்போதும், பொதுவிடங்களில் கூடும்போதும்.. மக்கள் முக கவசம் அணிந்திருந்தால்.. வைரஸ் தொற்று பரவுவது நாற்பது சதவீதம் குறைவதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதன் காரணமாக தற்போது அனைவரும் முக கவசம் அணிவதை கடைபிடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் முக கவசத்தை அணிந்து கொண்டு வெளியிடங்களுக்கு சென்று, வீட்டிற்கு திரும்பியவுடன் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். அதன்போது கண்களையும் கழுவ வேண்டும். ஏனெனில் வைரஸ் தொற்றால் கண்களில் அலர்ஜி ஏற்பட்டு கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் அறிகுறியாக கண்களில் ஏற்படும் பாதிப்பும் உண்டு என்று பட்டியலிடப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக கைகளை கழுவுவதைப் போல் அடிக்கடி கண்களையும் கழுவ வேண்டும். அத்துடன் முக கவசம் அணிந்திருக்கும் போதும், அணியாத போதும் கைகளைகொண்டு கண்களைக் கசக்கக்கூடாது. கண்களைத் தொடக் கூடாது எனினும் காண்டாக்ட் லென்ஸ் அணியும் போது கண்களை தொடவேண்ய தேவை ஏற்படும் இதனால் இந்த காலகட்டங்களில் காண்டாக்ட் லென்ஸ் அணிவதையும் முற்றாக தவிர்க்க வேண்டும்.

-டொக்டர் பிரசாந்த்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04