எமது வெற்றிக்கு  இவர்கள் தான் காரணம் - கொல்கட்டா நைட் ரைடர்ஸின் நிறைவேற்று அதிகாரி

12 Jun, 2020 | 08:40 PM
image

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்களில் எமது அணியின் வெற்றிக்கு வெளிநாட்டு வீரர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர் என கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் பிரதம நிறைவேற்ற அதிகாரியான வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐ.பி.எல் தொடரை நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஐ.பி.எல். போட்டியை நடத்த ஆயத்தமாகி வருகிறோம் என பி.சி.சி.ஐ. தலைவர் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அவ்வாறு நடைபெற்றால், வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் ஐ.பி.எல். தொடரை நடத்தலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. இதற்கு சென்னை சுப்பர் கிங்ஸ் நிர்வாகம் சிஎஸ்கே ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஐ.பி.எல். வெற்றிக்கு வெளிநாட்டு வீரர்கள் முக்கிய பங்காற்றி உள்ளனர் என கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் பிரதம நிறைவேற்ற அதிகாரியான வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘எந்தவொரு ஐ.பி.எல். அணிக்கும் முதுகெலும்பாக இருப்பது இந்திய வீரர்கள். ஆனால், எங்களுடைய அணியை நீங்கள் அவதானித்தீர்கள் என்றால் சுனில் நரைன், அண்ட்ரே ரஸல், இயன் மோர்கன், தற்போது பெட் கம்மின்ஸ் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இணைந்து சிறந்த அணியை உருவாக்க முடியும்’’ என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35