கல்வித்துறை பிரச்சினைக்களுக்கான தீர்வுகள் எம்மிடத்திலேயே உள்ளது - சார்ள்ஸ்

Published By: Digital Desk 3

12 Jun, 2020 | 09:12 PM
image

வடமாகாணத்தில் பாடரீதியான ஆசிரியர் பற்றாக்குறைக்கு அப்பால் துறைசார் வல்லுநர்கள் பற்றாக்குறையும் நிலவுகின்றது.

இந்நிலை மாறாவிடின் எமது சமுதாயத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறிவிடுமென வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேநேரம் வடமாகாண கல்வித்துறைசார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு எம்மிடத்திலேயே உள்ள நிலையில் அதுதொடர்பில் மத்தியரசை நாடமுடியாத சூழலில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வவுனியா மாவட்ட கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை வவுனியா மாநகர சபை காலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

அக்கலந்துரையாடலில், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன், வடமாகாண கல்விப்பணிப்பாளர் எஸ்.உதயகுமார், வவுனியா வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளர்  திருமதி. அன்னமலர் சுரேந்திரன், வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன், பாடசாலை அதிபர்கள் உட்பட வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு ஆளுநர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நான் வடமாகாண ஆளுநராக பதவியேற்றபோது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நீண்டகாலமாக வலிகளோடும் வேதனைகளோடும் வாழ்கின்ற மக்களுக்கு சேவையாற்றுகின்ற மிகப்பெரும் பணி எனக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நமது மாகாணத்தில் கல்வித்திணைக்களத்தில் மட்டுமல்லாது ஏனைய திணைக்களங்களிலும் ஆளனிப்பற்றாக்குறை நிலவுகின்றது.

இதற்கு காரணம் தகுதிவாய்ந்த துறைசார் வல்லுனர்களை  உருவாக்க நமது மாகாணம் தவறியுள்ளமையே ஆகும். யுனிசெப் அறிக்கையின் படி கிராமப்புற மாணவர்களில் 85 முதல் 90சதவீதம் வரை கல்வியை இடைநிறுத்தம் செய்கிறார்கள்.

நகர்ப்புற மாணவர்களே சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் கல்வி கற்கிறார்கள் அதிலும் மிகக்குறைந்த மாணவர்களே விஞ்ஞானம், மருத்துவம் மற்றும் பொறியியல் பாடங்களை கற்கின்றார்கள்.

அதிலும் சொற்பமான மாணவர்களே பல்கலைக்கழகத்திற்கு சென்று கல்வி கற்கின்றார்கள். நமது மாகாணத்தில் பாடரீதியான ஆசிரியர் பற்றாக்குறை மட்டும் நிலவவில்லை துறைசார் வல்லுநர்கள் பற்றாக்குறையும் நிலவுகிறது.

இந்நிலை மாறாதுவிடின் நமது சமுதாயத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறிவிடும். இதற்கான முழுத்தீர்வும் ஆசிரிய சமூகத்திடம் மாத்திரமேயுள்ளது. மாணவர்கள் ஆசிரியர்களையே முன்மாதிரிகளாகப்பார்க்கின்றார்கள்.

அதற்கான தகுதியுடன் ஆசிரியர்கள் செயல்படவேண்டும். நமது பின்னடைவிற்கான காரணங்கள் நம்மிடம் இருக்க அதற்கான தீர்வை மத்திய அரசிடம் சென்று கோரமுடியாத நிலையில் நான் இருக்கின்றேன்.

கல்விதான் இந்த மாகாணத்தின் அடித்தளம். கல்வி என்பது எழுத்தை மட்டுமல்ல வாழ்க்கையின் அத்துணை விடயங்களையும் மாணவர்களுக்கு கற்றுத்தரவேண்டும்.

ஆகவே, பிரச்சினைகளை விரைவாக களைந்து  மாகாண மாணவர்கள் மற்றும் சமுதாய வளர்ச்சியில் ஆசிரியர்கள் தான் செயற்படவேண்டும். மாகாண கல்வியமைச்சு மற்றும் திணைக்களத்துடன் இணைந்து முழு அர்ப்பணிப்போடும் ஊக்கத்தோடும் செயல்பட்டு வரவிருக்கும் பரீட்சைகளில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தவேண்டும். அதற்கான பூரண ஒத்துழைப்புக்களை நான் வழங்குவேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடிபாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம்...

2024-04-18 15:48:16
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52