பொருளாதாரமும் ஜனநாயகமும் 

Published By: Priyatharshan

12 Jun, 2020 | 05:53 PM
image

நாட்டில் கொரோனாவுக்கு பின்னரான இன்றைய சூழ்நிலையில் இயல்புநிலை வேகமாக திரும்பி வருகின்ற போதிலும் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசிகள்  பன் மடங்கு அதிகரித்துள்ளன. அதேவேளை, போதிய வருமானமோ, மாதாந்த சம்பளமோ இல்லாத சூழ்நிலையில், அதிகரித்துச் செல்லும் விலைவாசிக்கு ஈடுகொடுக்க முடியாத சூழ்நிலை அவர்களுக்கு தோன்றியுள்ளது.

 நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு அரசாங்கம் மானியங்களை வழங்கும் என்றும் நிவாரணங்களை கொடுக்கும் என்றும் எதிர்பார்த்து இருந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.

 இவை ஒருபுறமிருக்க, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இராணுவ ஆட்சிக்கு வித்திட்டு வருவதாகவும் ஆரம்பத்தில் இவ்வாறு இல்லா விட்டாலும் தற்பொழுது அது தொடர்பில் சந்தேகம் எழுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க கூறியுள்ளார்.

 ஆட்சியாளர்கள் எவ்வாறு இருந்தாலும் ஆட்சி முறையில் ஜனநாயகத் தன்மை இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசிய அவர், சீனி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் 20 தொடக்கம் 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார்.

 அதேவேளை பிரதமர் மற்றும் அமைச்சர்கள் 20 ஆயிரம் ரூபா பெறுமதியான சலுகை பொதிகளை வழங்குவதாக தெரிவித்தனர். பின்னர் 20 ஆயிரம் ரூபா பணம் வழங்குவதாக கூறி னர். அதுவும் கிடைக்கவில்லை. இறுதியாக 5,000 ரூபா வழங்களிலும் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலணி தொடர்பிலும் கருத்து வெளியிட்டுள்ளார். போதைப் பொருட்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்த செயலணி அமைக்கப்பட்டதாக க் கூறப்பட்டது. ஆனால் வர்த்தமானியில் அவ்வாறு எதுவும் இல்லை. அரசின் போக்கு ராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார். 

இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு, அரசாங்கம் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 அதேவேளை நாட்டின் ஜனநாயகத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், நிர்வாக முகாமைத்துவத்தை முன் எடுப்பது அவசியம். இன்றேல் நாளடைவில் அரசுக்கு எதிரான குரல்களே வலுவடையும் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04