பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பக்கூடிய சாத்தியக்கூறுகள் இலங்கைக்கு அதிகமாகவுள்ளது - பசில்

Published By: Digital Desk 3

11 Jun, 2020 | 08:54 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொரோனா  வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை   மீள் கட்டியெழுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் ஏனைய நாடுகளை  காட்டிலும்  இலங்கைக்கு அதிகமாக உள்ளது. சுற்றுலாததுறை சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை  இதன் முதற்கட்ட வெளிப்பாடு என   பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான  ஜனாதிபதி செயலணியின்  தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரச மற்றும் தனியார் துறை கட்டிட நிர்மாணத்துறை அதிகாரிகளுடன்  இன்று வியாழக்கிழமை அலரிமாளிகையில் இடம் பெற்ற  கலந்துரையாடலின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரச நிதியின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள  கட்டிடங்களை பயனுடையதாக மாற்றியமைப்பது, மற்றும்  கட்டிட நிர்மாணத்துறையில் தனியார் துறையினர் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த  இந்த பேச்சுவார்த்தையின் போது  கவனம் செலுத்தப்பட்டது.

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை துரிதமாக மீள கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் பிரதான நோக்கம். கொவிட் - 19  வைரஸ்  தாக்கம்,  உட்பட இதர காரணிகளினால் தற்போது இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி நிர்மாணப்பணிகளை துரிதமாக முன்னெடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கம்   உலகளாவிய ரீதியில் பாரிய தாக்கத்தை அனைத்து துறைகளிலும் ஏற்படுத்தியுள்ளது. எமது நாட்டிலும்  சுட்டிக்காட்டத்தக்க துறைகள் வீழ்ச்சியடைந்துள்ளன . எவ்வாறாயிலும் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கான  சாத்தியம்   ஏனைய  நாடுகளை காட்டிலும் அதிகமாக உள்ளன.  

சுற்றுலாத்துறை சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை இதன் முதற்கட்ட வெளிப்பாடாகும் என   செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அரசாங்கத்துக்கு  பாதிப்பினை ஏற்படுத்தாத விதத்தில்   அபிவிருத்தி நிர்மாணப்பணிகளை முன்னெடுக்கும் செயற்திட்டங்களை தனியார் மற்றும் அரச   கட்டிட நிர்மாணத்துறையினர்    செயலணியின் தலைவரிடம் ஒப்படைத்தனர். இத்திட்டங்கள் தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு  பசில் ராஜபக்ஷ உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31