இராணுவ ஆட்சி குறித்து சாடுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு உரிமையில்லை - பொதுஜன பெரமுன

11 Jun, 2020 | 07:45 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் இராணுவ  ஆட்சியை முன்னெடுத்து செல்வதாக ஐக்கிய தேசிய கட்சி,  தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

கூட்டமைப்பினருக்கு   சர்வாதிகார ஆட்சிமுறைமை தொடர்பில் கருத்துரைப்பதற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது. 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தை விமர்சித்து தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குரிமையினை  பயனற்றதாக்கவே இவர்கள் முய்ற்சிக்கிறார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்   சி. பி. ரத்னாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தபய ஆட்சி பொறுப்பினை ஏற்கும் போது தான் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவினை பெரிதும் எதிர்பார்த்ததாகவும், ஆனால் கணிசமான அளவே அவர்களின் ஆதரவு கிடைக்கப் பெற்றதாகவும் குறிப்பிட்டு அனைத்து மக்களுக்கும் பொதுவான  அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்வதாகவும் குறிப்பிட்டார்.

அரசாங்கம் ஒருபோதும் தமிழ், முஸ்லிம மக்களின் உரிமைகளை மறுக்கவில்லை. அத்துடன் இராணுவ ஆட்சி முறையினை முன்னெடுத்தும் செல்லவில்லை.  சர்வாதிகார ஆட்சி தொடர்பில்  கருத்துரைக்கும் தார்மீக உரிமை கூட்டமைப்பினருக்கு கிடையாது. 

எதிர் தரப்பினர் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் இம்முறை ஏமாற வேண்டாம்.

நல்லாட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்ததன் பயனை சிறுபான்மை மக்கள் பெறவில்லை. மாறாக  பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளானார்கள்.  இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு தமிழ், முஸ்லிம் மக்கள் முழுமையான ஆதரவு வழங்குவார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09