ரசிகர்களின்றி ஐ.பி.எல். போட்டியை நடத்த திட்டம்

Published By: Digital Desk 3

11 Jun, 2020 | 01:15 PM
image

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ரசிகர்களின்றி ஐ.பி.எல். போட்டியை நடத்த ஆயத்தமாகி வருவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ) தலைவர் செளரவ் கங்குலி  தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்தால் வெளிநாட்டு வீரர்கள் வர முடியாதளவுக்கு பயணக்கட்டுப்பாடுகள் இருப்பதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்களின்றி போட்டியை நடத்த முடியுமா? என்பது பற்றி  ஆலோசித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஐ.பி.எல். போட்டிகள் தொடர்பாக பி.சி.சி.ஐ. தலைவர் செளரவ்  கங்குலி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு கடிதமொன்று அனுப்பியுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“ ரசிகர்கள் இல்லாமல்  போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகின்றனர். ரசிகர்கள், அணிகளின் உரிமையாளர்கள், வீரர்கள், ஒளிபரப்பாளர்கள், அனுசரணையாளர்கள் என அனைவரும் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துள்ளனர்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என அண்மையில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். எனவே, நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இது தொடர்பாக பி.சி.சி.ஐ விரைவில் முடிவு எடுக்கும்”  என கங்குலி  அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெறாவிட்டால் இந்திய மதிப்பில் 4000 கோடி  ரூபா இழப்பை சந்திக்க நேரிடும் என்றும், ஐ.பி.எல். நடைபெறாவிட்டால் சம்பளத்தில் கை வைக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் கங்குலி ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05