பிரிட்டனிடமிருந்து ஹொங்கொங்கினை மீண்டும்  சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு 19-வது ஆண்டு நிறைவினையொட்டி, ஆயிரக்கணக்கான ஜனநாயக ஆதரவாளர்கள் ஹொங்கொங் வீதிகளில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபடவுள்ளனர்.

கடந்த 1997ஆம் ஆண்டு, ஜூலை 1ஆம் திகதி ஹொங்கொங் சீனாவிடம் பிரிட்டனால் ஒப்படைக்கப்பட்டது.இன்றைய ஆர்ப்பாட்ட பேரணிக்கு லாம் விங்-கீ தலைமை தாங்குகிறார்.

சீன கம்யூனிஸ்ட் தலைவர்களை விமர்சிக்கும் புத்தகங்களை விற்பனை செய்ததாக, லாம் விங்-கீ உள்ளிட்ட ஐந்து புத்தக வியாபாரிகளை சீன அதிகாரிகள் தடுத்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.