நெருப்பு வளைய சூரிய கிரகணம் ! வெற்றுக்கண்ணால் அவதானிக்க வேண்டாமென அறிவுறுத்தல் !

Published By: Digital Desk 3

10 Jun, 2020 | 09:54 PM
image

இம்மாதம் நெருப்பு வளைய சூரிய கிரகணம் நிகழவுள்ளது.

ஜூன் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 03.04 மணி வரை நீடிக்கிறது. இந்த சூரிய கிரகணம் சுமார் ஆறு மணிநேரம் நீடிக்கிறது.

நெருப்பு வளைய சூரிய கிரகணம் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி நிகழ்ந்தது.

இது 3 மணி நேரம் மட்டுமே நிகழ்ந்தது. அந்த 3 மணிநேரம் வானத்தில் மிகப்பெரிய அதிசயத்தை நிகழ்த்தி காட்டியது சூரிய கிரகணம்.

எதிர்வரும் 21 ஆம் திகதி நிகழப்போகும் சூரிய கிரகணம் இந்த ஆண்டிலேயே மிக நீண்ட சூரிய கிரகணமாகும்.

சில தினங்களுக்கு முன்புதான் புறநிழல் சந்திர கிரகணம் எனப்படும் பெனும்பிரல் சந்திர கிரகணம் நிகழ்ந்தது.

ஆனால் 21 ஆம் திகதி நிகழப்போகும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் 6 மணி நேரம் வானத்தில் அதிசயத்தை நிகழ்த்தப்போகிறது.

நெருப்பு வளைய சூரிய கிரகணம் சூரிய கிரகணத்தின்போது சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைத்து விட்டால் அது முழு சூரிய கிரகணம்.

சூரியன் முழுவதுமாக கருமையாக காட்சி தரும். அப்போது இருண்டு விடும். சந்திரனால் ஒரு பகுதி சூரியனை மட்டுமே மறைக்க முடிந்தால் அது பகுதி சூரிய கிரகணம். சந்திரனின் நிழல் சூரியனின் வட்டத்துக்குள் விழுந்து சூரியனின் விளிம்பு பகுதி நெருப்பு வளையமாக நமக்கு காட்சி அளித்தால் அது நெருப்பு வளைய சூரிய கிரகணம்.

இது கங்கண சூரிய கிரகணம் என்றும் இதைத்தான் நெருப்பு வளைய சூரிய கிரகணம் ( ring of fire) என்றும் கூறுகின்றனர்.

இலங்கை,இந்தியா,பாகிஸ்தான், சீனா, ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்வையிடலாம்.

சூரிய கிரகணம் காலை 9:15:58 மணிக்கு தொடங்குகிறது. மதியம் 12:10 மணிக்கு உச்சத்தை அடைகிறது. பிற்பகல் 3:04 மணிக்கு உச்சத்தை அடைகிறது. இந்த கிரகணத்தை சாதாரண கண்களால் காணக்கூடாது என வானியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right