மத்திய வங்கியின் புதிய ஆளுநர் தெரிவுசெய்யப்படும் போது அவர் முதலில்  இலங்கையராக இருக்க வேண்டுமென மஹிந்த ராஜபக்ஷ நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

பெபிலியான சுனத்ரா தேவி பிரிவெனாவில் சமய நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய மத்திய வங்கி ஆளுநரை தெரிவு செய்யும்போது, மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளை பெறுவதுடன், அவர்கள் யாரை மத்திய வங்கி ஆளுநராக ஏற்றுக்கொள்கின்றார்களோ அவர்களை மாத்திரமே மத்திய வங்கி ஆளுநராக தெரிவு செய்யப்படவேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த சமய நிகழ்விற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் சமுகமளித்தருந்தமை குறிப்பிடத்தக்கது.